rbi

ஜூன்23, கருப்பு பணம் விவகாரம் தொடர்பாக சிறப்பு புலனாய்வுக் குழு கேட்கும் தகவல்கள் மற்றும் ஆவணங்களை வழங்கும்படி வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.

கருப்பு பண விவகாரம் குறித்து விசாரணை நடத்தி கருப்பு பணத்தை இந்தியாவுக்கு கொண்டு வருவதற்காக முன்னாள் நீதிபதி எம்.பி.ஷா தலைமையில் சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழு தனது விசாரணையை தொடங்கியுள்ள நிலையில், இது தொடர்பாக தேவைப்படும் தகவல்கள் மற்றும் ஆவணங்களை வங்கிகளும் நிதி நிறுவனங்களும் கொடுக்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கி அறிக்கை வெளியிட்டிருக்கிறது.

முன்னதாக, சுவிட்சர்லாந்து நாட்டு வங்கிகளில் உள்ள இந்தியர்களின் கருப்பு பணம் தொடர்பான தகவல்களைக் கேட்டு அந்நாட்டு அரசுக்கு கடிதம் எழுத உள்ளதாக நிதி மந்திரி அருண் ஜெட்லி கூறினார்.

வரி ஏய்ப்புக்கு எதிரான போராட்டத்தில் இந்திய அரசுடன் இணைந்து செயல்பட சுவிட்சர்லாந்து அரசு விரும்புவதாக அந்நாட்டு தூதரகம் செய்தி வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

Loading