ஜூன்23, ஐதராபாத்தில் உள்ள சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வந்த சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிதிமோசடி வழக்கில் அரசுத் தரப்பில் மொத்தம் 216 சாட்சிகளிடம் விசாரிக்கப்பட்டுள்ளது. 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆவணங்கள் ஆய்வு செய்யப்பட்டன.
இறுதிக்கட்ட விசாரணை கடந்த வாரம் நிறைவடைந்தையடுத்து தீர்ப்பு வழங்கும் தேதி இன்று அறிவிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, இன்று வழக்கு விசாரணைக்கு வந்தபோது, தீர்ப்பு ஜூன் 26-ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் சிறப்பு நீதிமன்ற நீதிபதி சக்ரவர்த்தி அறிவித்தார்.
![]()

