சென்னை ஏர்போர்ட்டில் 60 வயது பெண் கடத்தி வந்த 2 1/2 கிலோ தங்கம்!

airport

ஜூலை21, இன்று அதிகாலை மலேசியா தலைநகரம் கோலாலம்பூரில் இருந்து சென்னைக்கு வந்த விமானத்தில் பயணிகளை சுங்கத் துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

அப்போது ஒரு பெண்ணின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த பெண் அதிகாரிகள் அவரை தனியாக அழைத்து சென்று சோதனை செய்தபோது தனது உள்ளாடையில் 2 1/2 கிலோ தங்கம் மறைத்து வைத்திருப்பது தெரியவந்தது.

விசாரணையில் அவரது பெயர் திரேஷ் செல்வராணி(60), விருதுநகரைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் மதிப்பு ரூ.85 லட்சம் ஆகும் என சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு