மது விற்பனை: சாதனை படைக்கும் அரியலூர் மாவட்டம்!

health-tips-for-summerதமிழகத்தில் மதுவுக்கு எதிராக குரல் கொடுக்கப்பட்டு வரும் நிலையில், அரியலூர் மாவட்டம் மது விற்பனையில் சாதனை படைத்து வருகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன் மதுக்கடையை மூடக் கோரி போராட்டம் நடத்திய காந்தியவாதி சசி பெருமாள், போராட்ட களத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து தமிழகத்தில் மதுவுக்கு எதிரான குரல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் தினந்தோறும் ஆங்காங்கே உண்ணாவிரதம், டாஸ்மாக் கடைகளை அடித்து நொறுக்குவது, தீ வைத்து கொளுத்துவது போன்ற போராட்டங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகிறது. இதனால், தமிழகம் முழுவதும் உள்ள அரசு டாஸ்மாக் கடைகளுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு விற்பனை நடைபெறுகிறது.

தமிழகம் முழுவதும் 5 நிர்வாக மண்டலங்கள், 33 வருவாய் மாவட்டங்கள் என பிரிக்கப்பட்டு ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு மாவட்ட மேலாளரின் கீழ் டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகிறது. இந்த கடைகளில் சுமார் 36 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். அவ்வப்போது டாஸ்மாக் மதுவின் விலை அதிகரித்தாலும், வருவாய் மட்டும் குறையாமல் ஆண்டுதோறும் 20 சதவிகிதம் வரை அதிகரித்தபடியே உள்ளது.

திருச்சி மாவட்டத்தில் 242 டாஸ்மாக் கடைகளும், பெரம்பலூர் மாவட்டத்தில் 42 கடைகளும், அரியலூர் மாவட்டத்தில் 64 டாஸ்மாக் கடைகளும் செயல்பட்டு வருகிறது. அரியலூர் நகர் பகுதியில் மட்டும் 7 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகிறது. இந்த கடைகளில் மட்டும் நாள் ஒன்றுக்கு ரூ.1.50 லட்சம் வரை மதுபானங்கள் விற்பனையாகி வருகிறது. அதிலும் விடுமுறை நாட்கள் மற்றும் பண்டிகை நாட்களில் ரூ.2 லட்சம் வரை விற்பனை நடைபெற்று சாதனை படைத்து வருகிறது.

இதில், அதிகபட்சமாக ஏலாக்குறிச்சியில் உள்ள டாஸ்மாக் கடையில் தினசரி ரூ.2 லட்சம் வரை மதுபானம் விற்பனையாகி வருகிறது. இந்நிலையில் அரியலூர் மாவட்டத்தில், மொத்த டாஸ்மாக் கடைகளில் நாள் ஒன்றுக்கு கிட்டத்திட்ட ரூ.1 கோடி வரை மதுபானங்கள் விற்பனையாகி சாதனை படைத்து வருகிறது என்ற அதிர்ச்சி தரும் தகவல் வெளியாகி உள்ளது.
இதையடுத்து, டாஸ்மாக் விவகாரத்தில் தமிழக அரசு விரைந்து ஒரு நல்ல முடிவை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்களும் பெண்களும் அரசுக்கு கோரிக்கை விடுத்து உள்ளனர்.

By True Tamil

ஆகஸ்ட் 8, 2015
மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு
மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு