ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிராக திரளும் தமிழகம். மீண்டும் தொடங்குமா மெரினா புரட்சி?

namakkaga

களம்: நெடுவாசல், புதுக்கோட்டை

நெடுவாசலில் ஹைட்ரோகார்பன் எடுக்கும் மத்தியரசின் திட்டத்திற்கு மாணவர்கள், பொதுமக்கள், இளைஞர்கள் திரையுலகினரிடையே எதிர்ப்புகள் வலுத்து வருகின்றன.
பட்டுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் நேற்று பேசிய நடிகர் விவேக் விளைநிலங்களை பாலைவனமாகிவிட்டு உணவை எங்கே தேடுவது என்று கேள்வி எழுப்பினார். நெடுவாசல் போராட்டக்களத்திற்கு இன்று சென்ற பிரபல திரைப்பட இயக்குனர் பாண்டிராஜ் போராட்டம் நடத்துபவர்கள் நக்சல்பாரிகளும் மாவோயிஸ்டுகளும் என்று கூறினால் நானும் அவர்களே என்று குரல் எழுப்பினர்.

இதனிடையே நெடுவாசல் போராட்டத்தில் இருப்பவர்களின் பின்னணியை ஆராய வேண்டும் என்று மத்திய இணை amaisar பொன். ராதாகிருஷ்ணன் கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. காரைக்காலில் பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் இல.கணேஷன் பூமியில் தேடாமல் வானத்திலா தேடுவது என்று கூறி ஹைட்ரோகார்பன் திட்ட எதிர்ப்பாளர்களை அலட்சியப்படுத்தியுள்ளார். மத்திய அமைச்சர்களின் இதுபோன்ற பேச்சுக்களை பிரதமர் மோடி கண்டுகொள்ளாமல் இருப்பது தமிழக விவசாயிகள் மீது அவரது அக்கறையின்மையை காட்டுகிறது.

மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள், திரையுலகினர் என ஒட்டுமொத்த தமிழகமும் ஹைட்ரோகார்போன் திட்டத்திற்கு எதிராக குரல் எழுப்பிவருவது மீண்டும் ஒரு மெரினா புரட்சியை உருவாக்கும் என்று தெரிகிறது.

மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு
மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு