அதிக மழை! அசுர வேகத்தில் நிரம்பும் அணைகள்!

அதிக மழை! அசுர வேகத்தில் நிரம்பும் அணைகள்!

நெல்லை மாநகர பகுதிகளில் நெல்லை சந்திப்பு, வண்ணாரப்பேட்டை, பாளையங்கோட்டை, புதிய பேருந்து நிலையம், நெல்லை டவுன், மேலப்பாளையம் உள்ளிட்ட பல பகுதிகளில் மிதமான மழை பெய்தது. தாழ்வான பகுதிகளில் எல்லாம் மழை நீர் தேங்கியது. மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் லேசான மழை பெய்தது. அணைப்பகுதியில் 673.2 மி மீ மழை காரணமாக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

பாபநாசம் அணையின் நீர்மட்டம் 14 அடி உயர்ந்து 118.60 அடியாக உள்ளது. அணைக்கு விநாடிக்கு 10,888 கனஅடி நீர்வரத்து உள்ளது.

சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 82.94 அடியிலிருந்து 84.94 அடியாக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் 30 அடி உயர்ந்து சேர்வலாறு அணை நிரம்பியதை அடுத்து அணையில் 10,000 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. அணைக்கு 7,837 கனஅடி நீர்வரத்து இருந்தது.

மணிமுத்தாறு அணைக்கு விநாடிக்கு 15,161 கனஅடி நீர்வரத்து இருந்தது. நீர்மட்டம் 13 அடி உயர்ந்து 100 அடியை எட்டியது.

1992 க்கு பிறகு இன்று அதிகபட்சமாக 673.2 ம.மீ மழை பதிவாகியுள்ளன. தொடர்ந்து மழை பெய்ததாலும், 10,000 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டதாலும் தாமிரவருணியில் கடும் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

மணிமுத்தாறு, பாபநாசம் அகஸ்தியர் குற்றாலம் அருவிகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதால் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு