நான் தவறு செய்துவிட்டேன்: பகிரங்க மன்னிப்பு கேட்ட சிம்பு!

நான் தவறு செய்துவிட்டேன்: பகிரங்க மன்னிப்பு கேட்ட சிம்பு!

சந்தானம் நடித்துள்ள சக்கபோடு போடு ராஜா படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடந்தது. நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசிய சிம்பு, “அஅஅ பட விஷயத்தில் நான் தவறு செய்துவிட்டேன்,” என்று கூறி மேடையிலேயே பகிரங்க மன்னிப்பு கேட்டார்.

தவறுதான் அவர் மேலும் பேசுகையில், “எனக்கு மோசடி விளையாட்டு தெரியாது. ஆனால் எல்லோரும் என் மீது தவறு சொல்கிறார்கள். எதுவும் இல்லாமல் யாராவது சொல்வார்களா… என் மீதும் தவறு இருக்கிறது. ஒப்புக் கொள்கிறேன்.
நான் தவறு செய்துவிட்டேன்: பகிரங்க மன்னிப்பு கேட்ட சிம்பு!

ஏஏஏ படம் சரியா போகலதான். தோல்வி படம்தான் ஒத்துக்கிறேன். அது ரசிகர்களுக்காக ஜாலியாக பண்ணின படம். அதுக்காக நான் வருத்தப்படல. அடுத்தடுத்த படங்களில் சரியாகிடும். வருத்தம் ஒரு பாகமாக முடிய வேண்டிய படம் சில காரணங்களால் ரெண்டு பாகமாயிடுச்சு. அதனால் கொஞ்சம் செலவானதால புரட்யூசருக்கு கொஞ்சம் மனக்கசப்பு இருந்தது. அதையும் மீறி நான் தவறு செய்திருந்தால் இந்த மேடையில் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.
நான் தவறு செய்துவிட்டேன்: பகிரங்க மன்னிப்பு கேட்ட சிம்பு!

நல்லவன் இல்ல நான் நல்லவன் என்று எப்போதும் சொல்ல மாட்டேன். நான் என்ன தவறு பண்ணேன்னு எனக்குத் தெரியும். கொஞ்சம் தப்பாயிடுச்சு, பரவாயில்லை. நான் இனிமே நடிக்க முடியாது என்றெல்லாம் சொல்கிறார்கள். எனக்கு அது பற்றித் தெரியவில்லை. மணிரத்னம் நம்பிக்கை மணிரத்னம் என்னை நடிக்க கூப்பிட்டிருக்கிறார். எந்த நம்பிக்கையில் கூப்பிடுகிறார் என்று தெரியவில்லை. அதில் நடிக்க ஆர்வமாகத்தான் இருக்கிறேன். ஒருவேளை நடிக்க முடிலேன்னா பரவாயில்லை, வேறு ஏதாவது செய்துவிட்டுப் போகிறேன். நான் நடிப்பது நிச்சயம் எனக்காக இல்லை. என் ரசிகர்களை சந்தோஷப்படுத்தத்தான். நடிக்க முடிலேன்னா அவர்களுக்கு சேவை செய்து விட்டுப்போகிறேன். நடிப்பதை தடுக்கலாம் ஆனால் நான் மக்களுக்கு சேவை செய்வதை எவனாலும் தடுக்க முடியாது. வேறு மொழிகளில் நடிப்பேன். ஏதோ ஒரு வழியில் ரசிகர்களை சந்தோஷப்படுத்துவேன்.நான் தவறு செய்துவிட்டேன்: பகிரங்க மன்னிப்பு கேட்ட சிம்பு!

இளையராஜாவை முன் மாதிரியாக வைத்து வளர்ந்தேன், மைக்கில் ஜாக்சன் எனது ரோல் மாடல், எனது தந்தை, ரகுமான் ஆகியோர் என் இசை மீது ஆர்வம் கொள்ளவைத்தவர்கள்.

மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு