ஆர்.கே நகரில் வெல்லப்போவது யார்? இன்று வாக்குப்பதிவு!

ஆர்.கே நகரில் வெல்லப்போவது யார்? இன்று வாக்குப்பதிவு!

சென்னை:ஆர்.கே நகர் தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது. இடைத்தேர்தல் களத்தில் முக்கிய அரசியல் கட்சியினர், சுயேச்சை வேட்பாளர்கள் என 59 பேர் களத்தில் உள்ளனர்.

இதில் ஆளும் அதிமுக சார்பில் அக்கட்சியின் மதுசூதனன் போட்டியிடுகிறார். திமுக சார்பில் மருதுகணேஷ் போட்டியிடுகிறார். பாரதிய ஜனதா சார்பில் அக்கட்சியின் மாநில செயலாளர் கரு.நாகராஜன், நாம் தமிழர் கட்சி சார்பில் கலைக்கோட்டுதயம் உள்ளிட்டோர் களமிறங்குகின்றனர். மேலும், சுயேச்சையாக போட்டியிடும் டிடிவி தினகரன் இடைத்தேர்தல் களத்தில் உள்ளார்.

அதிமுக வேட்பாளர் மதுசூதனின் பெயர் கொண்ட இரண்டு சுயேட்சை வேட்பாளர்கள் இடைத்தேர்தலில் போட்டியிடுகின்றனர். அதில் ஒருவருக்கு மின் கம்பமும், மற்றொருவருக்கு இரும்புக் கம்பியும் சின்னமாக ஒதுக்கப்பட்டுள்ளன. அதேபோல் சுயேட்சை வேட்பாளர் டிடிவி தினகரனின் பெயரில் மேலும் 3 பேர் போட்டியிடுகின்றனர்.  ஒருவருக்கு பெட்டி சின்னமும், மற்றொருவருக்கு ஆட்டோ-ரிக்சா சின்னமும் ஒதுக்கப்பட்டுள்ளன. மேலும் ஒருவருக்கு துளையிடும் கருவி ஒதுக்கப்பட்டுள்ளது.

மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு