ஐ.பி.எல். கிரிக்கெட் – சென்னை போட்டிக்கான டிக்கெட் விலை! அதிர்ச்சியில் ரசிகர்கள்!

ஐ.பி.எல். கிரிக்கெட் - சென்னை போட்டிக்கான டிக்கெட் விலை! அதிர்ச்சியில் ரசிகர்கள்!

சென்னை:பதினோறாவது ஐ.பி.எல். டி 20 கிரிக்கெட் போட்டி ஏப்ரல் 7ஆம் தேதி முதல் மே 27 ஆம் தேதி வரை நடக்கிறது. மும்பையில் நடைபெறும் இதன் தொடக்க போட்டியில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி யும் மோதுகின்றன. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, சென்னை சேப்பாக்கத்தில் 7 லீக் போட்டிகளில் பங்கேற்கிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, சென்னையில் ஆடும் முதல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை சந்திக்கிறது. இந்தப் போட்டி சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் ஏப்ரல் 10 ஆம் தேதி இரவு 8 மணிக்கு நடக்கிறது.

இந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி உள்ளூரில் மோதும் ஆட்டங்களுக்கான டிக்கெட் விலை விவரம் வெளியாகி இருக்கிறது. குறைந்தபட்ச டிக்கெட் கட்டணமாக ரூ.1,300 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதிகபட்ச டிக்கெட் விலை ரூ.6,500 ஆகும்.

மேலும் ரூ.1,500, ரூ.2,500, ரூ.4,500, ரூ.5,000 ஆகிய விலைகளிலும் டிக்கெட் விற்பனை செய்யப்படுகிறது. ஆன்லைனிலும், ஸ்டேடி யத்தில் உள்ள டிக்கெட் கவுன்ட்டர்களிலும் டிக்கெட் விற்பனை செய்யப்படும். ஏப்ரல் 2ஆம் தேதி டிக்கெட் விற்பனை தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் நடக்கும் போட்டிகள் விவரங்கள் தெரிந்துகொள்ள இங்கு கிளிக் செய்யவும்.

#IPL2018 #CSK #ChennaiSuperKings #Chennai #Dhoni #dhoni #ChennaiSuperKings #chennai #IPL11 #ChepaukDiaries #chepauk #practise #Sessions #love #chennaiipl #summeriscoming #Blessings #msdian #chennaisuperkings

மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு
மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு