சென்னையில் இன்று நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர்கள் கலந்து கொண்டனர் இதில் பேசிய சந்திப்பில் தோனி நெகிழ்ச்சியில் கண்ணீர் விட்டார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
சூதாட்ட சர்ச்சையில் சிக்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, 2 ஆண்டுகள் தடையைச் சந்தித்தது. இந்நிலையில் 2018ஆம் ஆண்டின் 11வது ஐபில் தொடரில் சி.எஸ்.கே மீண்டும் களமிறங்குகிறது.
இதில் தோனி, ஜடேஜா, ரெய்னா, பிராவோ, டுப்பிலிசிஸ் அணியில் தக்க வைக்கப்பட்டனர். இதில் புதிய வீரர்களாக ஹர்பஜன் சிங், இம்ரான் தகிர், வாட்சன் ஏலம் எடுக்கப்பட்ட்டது குறிப்பிடத்தக்கது.
இந்த சூழலில் நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் சி.எஸ்.கே அணி கேப்டன் தோனி செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, சி.எஸ்.கே மீண்டும் வந்தது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.
கடந்த கசப்பான நினைவுகளை மறந்துவிடுவோம் என்று கண்ணீரோடு கூறினார். எதிர்காலத்தை நோக்கி வெற்றி நடை போடுவோம்.
மிகவும் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் இருந்த தோனியை, கீழே அமர்ந்திருந்த பார்த்த சுரேஷ் ரெய்னா உடனே அவர் தண்ணீர் கொண்டு சென்று கொடுத்து தோனியை தேற்றினார்.
#Thala #Dhoni became very emotional while speaking about 2 years of struggle and come back of @ChennaiIPL !!! #WhistlePodu #WhistlePoduArmy pic.twitter.com/AWAycP7jrv
— CSK World (@CSK_World) March 29, 2018
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பங்குபெறும் போட்டிகள் விவரங்கள் தெரிந்துகொள்ள இங்கு கிளிக் செய்யவும்.
#Thala #Dhoni #WhistlePodu #WhistlePoduArmy #MSDhoni #IPL2018 #CSK #ChennaiSuperKings #Chennai #Dhoni #dhoni #ChennaiSuperKings #chennai #IPL11 #ChepaukDiaries #chepauk #practise #Sessions #love #chennaiipl #summeriscoming #Blessings #msdian #chennaisuperkings #DhoniEmotionalSpeach
![]()

