காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி, எதிர்க் கட்சிகள் சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் சாலை, இரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைகக்கோரி, இன்று முழு அடைப்புப் போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், சென்னை அண்ணா சாலையில், தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின் தலைமையில், எதிர்க்கட்சியினர் அரசுப் பேருந்தை சிறைபிடித்து, சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், அப்பகுதியில் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
அண்ணாசாலை பகுதியில் திமுக செயல் தலைவர் ஸ்டாலின், திருநாவுக்கரசர், திருமாவளவன், ஜவாஹிருல்லா, எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்டோர் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். தொடர்ந்து, அங்கிருந்து வாலாஜா சாலை வழியாக மெரீனா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடம் நோக்கி ஸ்டாலின் தலைமையில் பேரணியாக சென்ற அனைவரையும் காவல்துறையினர் தடுத்து நிறுத்தவே பதற்றம் ஏற்பட்டது.
உழைப்பாளர்கள் சிலைக்கு அருகே சாலையில் அமர்ந்து மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு எதிராக கண்டன தொடர் கோஷங்களை எழுப்பினர். இந்தப் போராட்டத்தில், ஆயிரக்கணக்கான கட்சித் தொண்டர்கள் கலந்துகொண்டுள்ளனர்.
பின்னர் மெரினாவில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட எதிர்க் கட்சி தலைவர் ஸ்டாலினை குண்டுக்கட்டாகத் தூக்கிச்சென்று அவரை போலீஸார் கைது செய்தனர். மற்றும் போராட்டத்தில் ஈடுபட்ட அணைத்து கட்சி தலைவர்கள், தொண்டர்களும் கைது செய்யப்பட்டனர் .
எதிர்க் கட்சிகள் சார்பில், தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் சாலைமறியல், ஆர்ப்பாட்டம், ரயில் மறியல் போன்ற போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன, சென்னையிலும் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெறுவதால், போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
#TNBandhUpdates #WeWantCMB #CauveryIssue #CauveryManagementBoard #DMK #AnnaSalai #MKStalin
![]()


