ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் அருகே உள்ள கான்களி கிராமத்தில் 1998-ம் ஆண்டு அக்டோபர் 2-ந்தேதி படப்பிடிப்பிற்காக சல்மான் கான் மற்றும் படக்குழுவினர் ராஜஸ்தான் சென்றிருந்தனர். அப்போது அங்கிருந்த அரியவகை கருப்பு மான்களை சல்மான் வேட்டையாடியதாகப் புகார் அளிக்கப்பட்டது. இந்தப் புகாரில் சைஃப் அலி கான், சொனாலி பிந்த்ரே, தபு மற்றும் நீலம் கொதாரி ஆகியோர் மீதும் வழக்கு தொடரப்பட்டது.
ஜோத்பூர் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நடந்து வந்த இந்த வழக்கில் இன்று தீர்ப்பு அறிவிக்கப்பட்டது. மான்வேட்டை வழக்கில் சல்மான்கான் குற்றவாளி என நீதிபதி அறிவித்தார். அவரை தவிர மற்ற அனைவரும் விடுவிக்கப்பட்டனர். சில மணிநேரத்திற்கு பின்னர் சல்மானுக்கான தண்டனை விபரங்களை நீதிபதி அறிவித்தார்.
5 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் அவருக்கு விதிக்கப்பட்டது. 5 ஆண்டு சிறை தண்டனையை அடுத்து அவரை போலீசார் ஜோத்பூர் மத்திய சிறைக்கு அழைத்துச் சென்றனர். அவரது தரப்பில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
#BlackBuckPoachingCase #SalmanKhan #WeSupportSalmanKhan #WeLoveSalmankhan #WeStandBySalmanKhan
![]()

