21-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி ஆஸ்திரேலியாவின் கோல்டுகோஸ்ட் நகரில் நேற்று முன்தினம் தொடங்கியது.
இந்த நிலையில், இன்று நடைபெற்ற ஆடவருக்கான பளுதூக்குதல் 77 கிலோ எடைப்பிரிவில் தமிழக வீரர் சதீஷ் சிவலிங்கம் மொத்தம் 317 கிலோ எடை தூக்கி தங்கம் பதக்கம் வென்று அசத்தினார்.

தங்கப்பதக்கம் வென்ற சதீஷ்குமார் சிவலிங்கம் தமிழகத்தைச்சேர்ந்தவர் ஆவார். வேலுர் மாவட்டம் சத்துவாச்சாரியை சேர்ந்த சதீஷ்குமார் சிவலிங்கம் கடந்த முறை ஸ்காட்லாந்தில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியிலும் தங்கம் வென்று இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது .
காமன்வெல்த் போட்டியில் இந்தியா தற்போது வரை 3 தங்கம், ஒரு வெள்ளி, ஒரு வெண்கலம் என மொத்தம் 5 பதக்கங்களுடன் நான்காவது இடத்தில் உள்ளது.
Big congrats to Our Glasgow Games gold medalist #SathishKumarSivalingam who retains his crown in 77 kg men’s weightlifting at #CommonWealthGames making it a hat trick by the Indian weighlifters.Hunt for gold is on!🇮🇳#SaturdayMotivation#SathishSivalingam pic.twitter.com/BkPXRCl6gn
— Geetika Swami (@SwamiGeetika) April 7, 2018
#CWG2018 #SathishSivalingam #SathishKumarSivalingam #GC2018
![]()

