திமுக செயல் தலைவர் ஸ்டாலின் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ் பாரதியிடம் தி.மு.க தலைவர் பதவிக்கான வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
முன்னதாக ஸ்டாலின் திமுக பொது செயலாளர் பேராசிரியர் அன்பழகன் வீட்டிற்கு சென்று வாழ்த்து பெற்றார்.
அதனை தொடர்ந்து மறைந்த திமுக தலைவர் கலைஞர் கருணாநிதியின் சமாதிக்கும் சென்று மறியாதை செலுத்தினார்.
அதனை அடுத்து கோபாலபுரம் இல்லத்திற்கு சென்று அவரது தயார் தயாளு அம்மையாரை சந்தித்து வாழ்த்து பெற்று அறிவாலயம் வந்தார்.
திமுக பொதுக்குழு கூட்டம் வரும் 28ம் தேதி செவ்வாய் கிழமை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தில் நடைபெற உள்ள நிலையில் இன்று செயல் தலைவர் மு.க ஸ்டாலின் திமுக தலைவர் பதவிக்கான வேட்புமனுவை அண்ணா அறிவாலயத்தில் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ் பாரதியிடம் தாக்கல் செய்தார்.
கனிமொழி ஸ்டாலினுக்கு முத்தமிட்டு வாழ்த்துகளை தெரிவித்தார்.
அதே போல் திமுக முதன்மை செயலாளராக பொறுப்பு வகிக்கும் துரைமுருகன் பொருளாளர் பதவிக்கு தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
வேட்பு மனுக்கள் இன்று மாலை 5மணி வரை வேட்பு பெறப்படுகிறது.
மேலும் வேட்பு மனுவை திரும்ப பெறுபவர்கள் நாளை மதியம் 1.30க்குள் திரும்ப பெறலாம் என்றும் பின்னர் பரிசினை நடைபெற்ற இறுதி வேட்பாளர் பட்டியல் நாளை மாலை வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
![]()




