‘த்ரிஷ்யம்’ போல த்ரில் தரும் மலையாள OTT படங்கள்!

‘த்ரிஷ்யம்’ போல த்ரில் தரும் மலையாள OTT படங்கள்!

சஸ்பென்ஸ் மற்றும் திரில்லர் திரைப்படங்களுக்கு ரசிகர்கள் எப்போதும் தனி வரவேற்பு அளித்து வருகின்றனர். குறிப்பாக மலையாள சினிமா, விறுவிறுப்பான திரைக்கதை மற்றும் எதிர்பாராத திருப்பங்களால் ரசிகர்களை கவர்ந்து வருகிறது. ‘த்ரிஷ்யம்’ திரைப்படம் பெற்ற வெற்றிக்குப் பிறகு, அதேபோன்ற பல சஸ்பென்ஸ் மற்றும் மிஸ்ட்ரி படங்கள் OTT தளங்களில் அதிக கவனம் பெற்றுள்ளன.

இந்த வார இறுதியில் OTT-யில் பார்க்கக்கூடிய சில சிறந்த மலையாள திரில்லர் திரைப்படங்கள் குறித்து பார்க்கலாம்.

2021ஆம் ஆண்டு வெளியான ‘Seetharaam Benoy Case Number Eighteen’ திரைப்படம் கிரைம் மற்றும் திரில்லர் அம்சங்களுடன் உருவாகியுள்ளது. கிராமப்புறத்திற்கு மாற்றப்பட்ட போலீஸ் அதிகாரி அங்கு நடக்கும் மர்ம கொலை மற்றும் கொள்ளை சம்பவங்களை விசாரிக்கும் கதைக்களம் கொண்ட இப்படம், இறுதி வரை பரபரப்பை தக்கவைக்கிறது. இந்த திரைப்படத்தை அமேசான் பிரைம் OTT தளத்தில் பார்க்கலாம்.

2022ஆம் ஆண்டு வெளியான ‘Twenty One Grams’ திரைப்படம் மர்ம கொலை விசாரணையை மையமாகக் கொண்ட த்ரில்லர் படமாகும். பல திருப்பங்களுடன் நகரும் இந்த படம் சஸ்பென்ஸ் ரசிகர்களை கவர்ந்துள்ளது. இப்படம் ஜியோ ஹாட்ஸ்டார் OTT தளத்தில் கிடைக்கிறது.

நடிகை நயன்தாரா நடித்த ‘Nizhal’ திரைப்படம் மனோவியல் மிஸ்ட்ரி கதைக்களத்துடன் உருவாகியுள்ளது. ஒரு சிறுவன் கூறும் கொலை சம்பவக் கதை நிஜத்தில் நடந்த சம்பவங்களுடன் தொடர்புபடும்போது கதை விறுவிறுப்பாக மாறுகிறது. இப்படத்தை அமேசான் பிரைம் மற்றும் ஆஹா OTT தளங்களில் பார்க்கலாம்.

‘Kooman’ திரைப்படம் தமிழ்நாடு – கேரள எல்லைப்பகுதியில் உள்ள காவல் நிலையத்தை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. ஒரு போலீஸ் அதிகாரி சந்திக்கும் மர்ம சம்பவங்களே இப்படத்தின் முக்கிய அம்சமாகும். த்ரில்லர் ரசிகர்களுக்கு இது சிறந்த தேர்வாக பார்க்கப்படுகிறது. இப்படம் அமேசான் பிரைம் OTT-யில் கிடைக்கிறது.

2007ஆம் ஆண்டு வெளியான ‘Detective’ திரைப்படம் தற்போது கூட சஸ்பென்ஸ் ரசிகர்களின் விருப்ப பட்டியலில் இடம்பெற்று வருகிறது. தற்கொலை என கருதப்பட்ட மரணம் பின்னர் கொலையாக மாறும் நிலையில் நடைபெறும் விசாரணை கதைக்களம் கொண்ட இப்படம், விறுவிறுப்பான அனுபவத்தை வழங்குகிறது. இப்படத்தை ஜியோ ஹாட்ஸ்டார் OTT தளத்தில் பார்க்கலாம்.

மலையாள சினிமாவின் தரமான திரைக்கதைகள் மற்றும் த்ரில் அம்சங்கள் காரணமாக, இத்தகைய திரைப்படங்கள் தொடர்ந்து OTT ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றன.

மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு
மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு