டெல்லியில் 14 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை

child-raped

டெல்லியில் 14 வயது மணிப்பூர் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக அந்த சிறுமி வேலை பார்த்து வந்த வீட்டு உரிமையாளரின் மகன் கைது செய்யப்பட்டுள்ளார். டெல்லி மருத்துவமனை ஒன்றில் காயங்களுடன் சிகிச்சை பெற்று வரும் சிறுமியின் உடல்நிலை முன்னேற்றம் கண்டு வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், மகளிர் அமைப்பை சேர்ந்தவர்கள், குற்றவாளிக்கு விரைவில் தண்டனை வழங்க கோரி வசந்த விகார் காவல்நிலையத்தை முற்றுகையிட்டனர். டெல்லியில் கடந்த வாரம் அருணாச்சலப் பிரதேச மாநிலத்தை சேர்ந்த சிறுவனை அடையாளம் தெரியாத கும்பல் ஒன்று தாக்கியதில், அந்த சிறுவன் உயிரிழந்தான். இந்நிலையில், மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியிருப்பது டெல்லியில் வசிக்கும் வடகிழக்கு மாநிலத்தவர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு