பாலு மகேந்திரா இறுதிசடங்கு புகைப்பட தொகுப்பு

Balu-Mahendra-Funeral

டைரக்டர் பாலுமகேந்திரா மறைவு பற்றி தமிழக கவர்னர் கே.ரோசய்யா  இரங்கல் செய்தி வெளியிட்டார். அதில்,  ‘’பழம்பெரும் கதாசிரியரும், சினிமா இயக்குனருமான பாலுமகேந்திரா மறைவு குறித்து அறிந்ததும் நான் மிகவும் அதிர்ச்சி அடைந்தேன். அவர் எடுக்கும் படங்களும், காட்சி அமைப்புகளும் அவருக்கே உரிய பாணியில் தனித்துவம் வாய்ந்ததாக இருக்கும். இவரின் படங்கள் உண்மை சம்பவங்களை எடுத்துக் கூறும் வகையில் எளிமையாக இருக்கும்.

இந்திய திரைப்பட உலகில் இயக்குனர் பாலுமகேந்திராவின் படங்களுக்கு தனி இடம் உண்டு. அவருடைய படைப்புகள் சினிமாத்துறையில் சாதிக்கத்துடிக்கும் இளைஞர்களுக்கு உத்வேகம் அளிக்கக்கூடியதாக இருக்கும். அவருடைய இழப்பு இந்தியா சினிமாத்துறைக்கு, குறிப்பாக தமிழ் சினிமாத்துறைக்கு மிகப்பெரிய இழப்பு ஆகும்.

அவரை இழந்து வாடும் அவருடைய குடும்பத்தினருக்கு இரங்கலை தெரிவிப்பதுடன், அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டிக்கொள்கிறேன்’’என்று கூறப்பட்டுள்ளது.

மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு