திரையுலகினர் சூழ பாலுமகேந்திரா இறுதிச் சடங்குகள் முடிந்தது

Balu Mahendra, who made his visuals speak, dies at 74

நேற்று காலை 11 மணியளவில் மாரடைப்பால் பாலுமகேந்திரா மரணமடைந்தார். அதனைத் தொடர்ந்து அவரது உடல் தசரதபுரத்தில் உள்ள அவரின் சினிமா பட்டறை வளாகத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. ஏராளமான திரைநட்சத்திரங்கள், அரசியல் பிரமுகர்கள், ரசிகர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.

நேற்று பாலுமகேந்திராவின் உடலை பார்க்க அனுமதி மறுக்கப்பட்ட அவரின் இரண்டாவது மனைவி மவுனிகா இன்று காலை வந்து பாலுமகேந்திராவின் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தினார். மதியம் 12.30 மணிக்கு இறுதி ஊர்வலம் தொடங்கியது. ஏராளமான திரையுலகினர், ரசிகர்கள் இதில் கலந்து கொண்டனர்.

மதியம் ஒரு மணிக்கு மேலாக போரூர் மயானத்தில் இறுதிச் சடங்குகள் தொடங்கின. அவரது உடல் மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. இறுதிச் சடங்குகளை பாலுமகேந்திராவின் மகன் ஷங்கி மகேந்திரா செய்தார்.

மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு