Sochi Olympics 2014: Russia closes costliest Olympic games

பிப்ரவரி 24: ரஷ்யாவின் சோச்சி நகரில் நடைபெற்று வந்த குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் இன்றுடன் முடிவுக்கு வந்துள்ளன.

17 நாட்கள் நடைபெற்று வந்த இப்போட்டிகளில் முதன் முறையாக அதிகத் தங்கப் பதக்கம் வென்று முதலிடத்தைப் பிடித்தது ரஷ்யா. 13 தங்கம், 11 வெள்ளி, 9 வெண்கலம் என மொத்தம் 33 பதக்கங்களை ரஷ்யா பெற்றது. நோர்வே 11 தங்கங்களுடன் இரண்டாம் இடத்திலும், கனடா 10 தங்கங்களுடன் மூன்றாம் இடத்திலும், அமெரிக்கா, நெதர்லாந்து, ஜேர்மனி, சுவிற்சர்லாந்து ஆகியன அடுத்தடுத்த இடங்களையும் பிடித்தன.

இன்று இடம்பெற்ற ஐஸ் ஹாக்கி இறுதிப் போட்டியில் ஸுவீடனை 3-0 என வீழ்த்தி கனடா இறுதித் தங்கப் பதக்கத்தை வென்றது. அடுத்த முறை குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் தென் கொரியாவின் பியோங்சாங் நகரில் நடைபெறவுள்ளன.

இம்முறை ரஷ்யாவில் நடைபெற்று முடிந்த குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளுக்காக செலவிடப்பட்ட மொத்த தொகை 51 பில்லியன் அமெரிக்க டாலராகும். இது 2008 இல் சீனாவில் நடைபெற்ற கோடைகால ஒலிம்பிக் போட்டிகளின் செலவை விட அதிகமாகும். அதோடு, ரஷ்யாவின் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள், ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு எதிரான புடீனின் கொள்கைகள், கம்யூனிசக் கொள்கைகள் என்பன சோச்சி ஒலிம்பிக் நிகழ்வுகளுக்கு கடும் சவாலாக விளங்கின

Loading