அன்பானவன் அசராதவன் அடங்காதவன் – ஒரு பார்வை!

அன்பானவன் அசராதவன் அடங்காதவன் - ஒரு பார்வை!

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் சிம்பு , தமன்னா, ஸ்ரேயா, மஹத், மொட்டை ராஜேந்திரன், கோவை சரளா மற்றும் பலர் நடித்துள்ள அன்பானவன் அசராதவன் அடங்காதவன் திரைப்படம் ஒரு பார்வை.

துபாயில் பெரிய டான் ஒருவரை பிடிக்க, காவல்துறை அதிகாரி கஸ்தூரி தலைமையில் ஒரு டீம் செயல்படுகின்றது. அந்த டான் வேறு யாருமில்லை மதுரையில் லோக்கல் தாதாவாக வலம் வந்த மதுரை மைக்கல் தான்.

மைக்கல் நண்பர் மகத் தங்களின் ப்ளாஷ்பேக்கை துபாய் போலிஸிடம் சொல்வதில் இருந்து படம் தொடங்குகின்றது. மதுரையை கலக்கி வரும் சிம்பு, ஸ்ரேயாவுடன் காதலில் விழுகின்றார்.

ஆனால், இவரின் அடிதடி, வெட்டுக்குத்தால் ஸ்ரேயாவை இழக்க நேரிடுகின்றது. அதை தொடர்ந்து அவர் துபாய் சென்று டான் ஆகிறார். துபாய் போலிஸே அவரை தேட அவரோ சென்னையில் செட்டில் ஆகின்றார், மதுரை மைக்கல் அஸ்வின் என்ற பெயரில் 55 வயதில் 26 வயதான தமன்னாவுடன் காதல் வயப்படுகின்றார்.

இவர்கள் காதல் என்ன ஆனது, துபாய் போலிஸ் சிம்புவை தேடி பிடித்தார்களா? என்பதை இரண்டாம் பாகத்திற்கு லீட் கொடுத்து முடித்துள்ளார் ஆதிக்.

யுவன் பாடல்கள் பெரிதும் கவரவில்லை என்றாலும் தீம் மியூஸிக்கில் மிரட்டியுள்ளார். கிருஷ்ணனின் ஒளிப்பதிவு கலர்புல்லாக இருக்கின்றது.

மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு
மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு