குழந்தை அழுததால் கொலை செய்த பணிப்பெண்

truetamil

அமெரிக்காவின் கனெக்டிகட் மாகானம் பகுதியில் வசித்துவரும் இந்திய தம்பதியினரின் குழந்தையை பணிப்பெண் தரையில் வீசி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் நியூ ஹெவன் என்ற இடத்தில் வசித்து வருபவர் சிவகுமார் (33). அவரது மனைவி தேன்மொழி (24). தமிழகத்தைச் சேர்ந்த இவர்களது 19 மாத குழந்தை ஆதியன்.

இவர்களின் குழந்தையை கிஞ்ஜல் படேல் (27) என்ற பெண் பணிப்பெண்ணாக செயல்பட்டு கவனித்து வந்தார். அவரும் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் தான்.

இந்த நிலையில் கடந்த 16ந் தேதி வீட்டில் குழந்தையை கவனித்துக்கொண்டிருந்த கிஞ்ஜல் படேல், குழந்தையின் செயலை கண்டு கோபமடைந்தார். குழந்தையை தரையில் வேகமாக வீசினார். இதில் குழந்தையின் தலை தரையில் மோதி பலத்த காயம் ஏற்பட்டது. வலி தாங்க முடியாமல் குழந்தை கதறி அழுதது.

உடனே படேல், சிவகுமாருக்கு போன் மூலம் குழந்தைக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாக கூறினார். வீட்டுக்கு விரைந்து வந்த சிவகுமார், குழந்தையை அங்குள்ள மருத்துவமனஇயில் சேர்த்தார். இந்த நிலையில் ஆஸ்பத்திரியில் குழந்தை சிகிச்சை பலனின்றி இறந்தது.

இந்த வழக்கில் கிஞ்ஜல் படேலை காவல்துறையினர் கைது செய்து வழக்கு பதிவு செய்து அவரிடம் விசாரணை நடத்தியதில் குழந்தையை தரையில் வீசி தாக்கியதை ஒப்புக்கொண்டார்.

இந்தநிலையில் குழந்தையின் மரணத்திற்கு பெற்றோரின் பொறுப்பின்மையே காரணம் எனக் கூறி தேன்மொழி, சிவக்குமார் ஆகிய இருவரையும் காவல்துறையினர் இந்த வழக்கில் கைது செய்துள்ளனர்.

மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு
மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு