நாளை ஐ.பி.எல்க்கு எதிராக போராட்டம் நடத்தப்படும் என பாரதிராஜா, சத்யராஜ் உள்ளிட்டோர் அறிவிப்பு!

நாளை ஐ.பி.எல்க்கு எதிராக போராட்டம் நடத்தப்படும் என பாரதிராஜா, சத்யராஜ் உள்ளிட்டோர் அறிவிப்பு!

நாளை சென்னையில் நடக்கவுள்ள ஐ.பி.எல்.போட்டியை எதிர்த்து போராட்டம் நடத்தப்படும் என பாரதிராஜா, சத்யராஜ், அமீர், ஆர்.கே.செல்வமணி உள்ளிட்டோர் அறிவித்துள்ளனர்.

சென்னை சேப்பாக்கத்தில் தமிழர் கலை இலக்கியப் பண்பாட்டுக் கழகம் சார்பில் பத்திரிக்கையாளர்களைச் சந்தித்த பாரதிராஜா, சத்யராஜ், அமீர், ஆர்.கே.செல்வமணிஉள்ளிட்டோர் காவிரிக்காக நடைபெறும் போராட்டத்தை திசைதிருப்பும் கொண்டாட்டமாக ஐ.பி.எல். போட்டி நடத்தப்படுவதாகக் கூறினர். அதனை எதிர்த்து, நடக்கப் போகும் தார்மீக ரீதியான யுத்தம் எங்கு, எப்போது என்பதை நடக்கும் போது தெரிந்து கொள்ளுங்கள் என தெரிவித்தனர்.

பாரதிராஜா

தமிழர் கலை இலக்கிய பண்பாட்டு பேரவைக்கு எந்த அரசியல் அடையாளமும் கிடையாது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க, அரசியல் சாயத்தை கலைத்துவிட்டு தமிழனாக ஒன்று கூடுங்கள். துக்க வீட்டின் அருகே கொண்டாட்டங்கள் தேவையா? காவிரி பிரச்சனையை கருத்தில் கொண்டு ஐபிஎல் போட்டியை தள்ளி வைக்க வேண்டும்.

காவிரிக்காக ஒற்றுமையாக போராட மட்டும் கட்சி, வண்ணம், கொடி, பேதம் கடந்து இணையுங்கள் என பாரதிராஜா அழைப்பு விடுத்துள்ளார்.

சத்யராஜ்

40 ஆண்டுகளாக தாம் நடிப்பதாகவும், நேர்மையாக இருப்பதால் ஐ.டி. ரெய்டுக்கு அஞ்சப் போவதில்லை என்றும் தெரிவித்துள்ள சத்யராஜ், அப்பா வேடத்தில் நடிக்கும் சத்யராஜைக் கண்டு மாபெரும் தலைவர்கள் அஞ்சத் தேவையில்லை எனத் தெரிவித்தார். எதிர்காலத்தில் அரசியலுக்கு வரும் நோக்கமும் தமக்கு இல்லை என அவர் விளக்கமளித்தார்.

ஜல்லிக்கட்டுக்குப் பின், இளைஞர்களின் எழுச்சி காவிரிக்காக அதிகரித்து வரும் போது, அதை திசைதிருப்பும் வகையில் ஐ.பி.எல். தேவையில்லை எனவும் குறிப்பிட்டார்.

ஆர்.கே.செல்வமணி

இரண்டு ஆண்டுகளாக சூதாட்டம் நடந்த சி.எஸ்.கே. அணியின் விளையாட்டை பார்க்காமல் யாரும் உயிரிழக்கவில்லை எனக் கூறிய ஆர்.கே.செல்வமணி, விவசாயிகளுக்காக ஐ.பி.எல். போட்டியைப் புறக்கணித்தாலும் யாரும் உயிரிழக்கப்போவதில்லை என தெரிவித்தார்.

மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு
மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு