செங்கல்பட்டு அருகே அரசு பேருந்து மீது லாரி மோதல் : 20 பேர் படுகாயம்!

செங்கல்பட்டு அருகே அரசு பேருந்து மீது லாரி மோதல் : 20 பேர் படுகாயம்!

செங்கல்பட்டு அருகே கடலூரில் இருந்து சென்னை நோக்கி வந்த அரசு பேருந்து மீது லாரி மோதியதில் அரசுப்பேருந்து 25 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. செங்கல்பட்டு புறவழிச்சாலையில் புலிப்பாக்கம் என்னும் இடத்தில் இந்த விபத்து நிகழ்ந்தது. சாலையை கடக்க முயன்ற லாரி ஒன்று கடலூரில் இருந்து சென்னை நோக்கி வந்த அரசு பேருந்து மீது மோதியது.

இதில் 25 அடி பள்ளத்தில் அரசு பேருந்து கவிழ்ந்தது. பேருந்தில் பயணித்த 41 பயணிகளில் 20-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் பயணிகளை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பள்ளத்தில் விழுந்த பேருந்தை கிரேன் மூலம் மீட்டனர். சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இந்த விபத்து நிகழ்ந்ததால் சுமார் 5 கிலோமீட்டர் தொலைவிற்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு