8 அணிகள் பங்கேற்கும் 11-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நாளை தொடங்கி மே மாதம் 27-ந்தேதிவரை நடக்கிறது. இதன் தொடக்க ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் – மும்பை அணிகள் மோதுகின்றனர்.

ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி 2008-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. அதில் இருந்து ஆண்டுதோறும் ஐ.பி.எல். போட்டி நடைபெற்று வருகிறது.

இதுவரை 10 ஐ.பி.எல். போட்டி நடைபெற்று உள்ளது. இதில் மும்பை இந்தியன்ஸ் அதிகபட்சமாக 3 முறை சாம்பியன் பட்டம் பெற்று முத்திரை பதித்துள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட்ரைடர்ஸ் ஆகிய அணிகள் தலா 2 முறையும், சன்ரைசர்ஸ் ஐதராபாத், ராஜஸ்தான் ராயல்ஸ், டெக்கான் சார்ச்சர்ஸ் ஆகிய அணிகள் தலா ஒரு முறை ஐ.பி.எல். கோப்பையை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

2 ஆண்டு தடைக்கு பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகளும் அவற்றோடு நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட்ரைடர்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், கிங்ஸ் லெவன் பஞ்சாப், டெல்லி டேர்டெவில்ஸ் ஆகிய அணிகள் கலந்து கொள்கின்றன.

சென்னை சூப்பர் கிங்ஸ்

2 ஆண்டு தடைக்கு பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் ஐ.பி.எல்லில் கலந்துகொள்கிறது ஆகையால் கோப்பையை வெல்லும் முனைப்புடன் உள்ளது. மீண்டும் தல தோனி தலைமையில் சென்னை சூப்பர் கிங்ஸ் களம்காணுகிறது.

பேட்டிங்கில் தோனி, சுரேஷ் ரெய்னா, முரளி விஜய், பாப் டு பிளெஸ்ஸிஸ், சாம் பில்லிங்ஸ், கேதார் ஜாதவ், அம்பதி ராயுடு மற்றும் ஆல்ரவுண்ட்டர் வரிசையில் ஷேன் வாட்சன், டுவாய்ன் பிராவோ, ரவீந்திர ஜடேஜா ஆகியோர் உள்ளனர்..

பந்து வீச்சில் முக்கியமாக ஹர்பாஜன் சிங், மார்க் உட், கார்ன் ஷர்மா, சாகுரல் தாகூர், லுங்கிசைனி நிகிடி ஆகியோர் உள்ளனர்.

இவர்கள் சிறப்பாக செயல்பட்டால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மூன்றாவது முறையாக வெல்லும் வாய்ப்பு உள்ளது.

டெல்லி டேர்டெவில்ஸ்

மீண்டும் அணிக்கு திரும்பிய கவுதம் காம்பிர் தலைமையில் களமிறங்கும் டெல்லி டேர்டெவில்ஸ் அணி முதல் முறையாக ஐபிஎல் கோப்பையை வெல்ல முனைப்புடன் உள்ளது.

பேட்டிங்கில் முக்கியமாக கவுதம் காம்பிர், ரிஷப் பண்ட், ஷ்ரேயஸ் ஐயர், க்ளென் மேக்ஸ்வெல், கொலின் முன்றொ, ஜேசன் ராய் ஆகியோர் உள்ளனர்.

பந்து வீச்சில் முக்கியமாக ட்ரெண்ட் போல்ட், முஹம்மத் சாமி, கிறிஸ் மோரிஸ், ரபாட, அமித் மிஸ்ரா, விஜய் ஷங்கர் ஆகியோர் உள்ளனர்.

இவர்கள் சிறப்பாக செயல்படும் பட்சத்தில் டெல்லி டேர்டெவில்ஸ் அணி முதல் முறையாக ஐபிஎல் கோப்பையை வெல்லும் வாய்ப்பு உள்ளது.

மும்பை இந்தியன்ஸ்

இதுவரை 3 முறை சாம்பியன் பட்டம் பெற்ற நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் ஐபிஎல் கோப்பையை தக்க வைத்துக் கொள்ள நினைக்கும்.

ரோகித்சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் சமபலத்துடன் உள்ளது.

பேட்டிங்கில் முக்கியமாக ரோஹித் சர்மா, கிரான் பொல்லார்ட், இவின் லெவிஸ், இஷான் கிஷான், சூரியகுமார் யாதவ், ஜே பி டுமினி, பென் கட்டிங், ஹார்திக் பாண்டியா ஆகியோர் உள்ளனர்.

பந்து வீச்சில் முக்கியமாக ஜஸ்பிரிட் பும்ராஹ், கருனால் பாண்டியா, பேட் கம்மின்ஸ், முஸ்தபிஸுர் ரஹ்மான், மிட்செல் மெக்லெனகன் ஆகியோர் உள்ளனர்.

இவர்கள் சொலிக்கும் நேரத்தில் மும்பை இந்தியன்ஸ் கோப்பையை தக்க வைத்துக் கொள்ள முடியும் .

கிங்ஸ் லெவன் பஞ்சாப்

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி தமிழக வீரர் அஸ்வின் தலைமையில் களமிறங்கிறது. இந்த அணியும் முதல் முறையாக ஐபிஎல் கோப்பையை வெல்ல முனைப்புடன் உள்ளது.

பேட்டிங்கில் முக்கியமாக யுவராஜ் சிங் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளார், கே.எல் ராகுல், ஆரோன் பின்ச், கருண் நாயர், டேவிட் மில்லர், கிறிஸ் கெய்ல், மயங்க அகர்வால் ஆகியோர் உள்ளனர்.

பந்து வீச்சில் முக்கியமாக அஸ்வின், அக்ஷர் படேல், அன்றெவ் டை, மார்கஸ் ஸ்டோனிஸ், பென் ட்வர்ஷுய்ஸ் ஆகியோர் உள்ளனர்.

இவர்கள் சிறப்பாக செயல்படும் பட்சத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி முதல் முறையாக ஐபிஎல் கோப்பையை வெல்லும் வாய்ப்பு உள்ளது.

கொல்கத்தா நைட்ரைடர்ஸ்

கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் தலைமையில் களமிறங்கிறது. இந்த அணி இரண்டுமுறை கோப்பையை வென்றுள்ளது

பேட்டிங்கில் முக்கியமாக தினேஷ் கார்த்திக் , கிறிஸ் லயன், ராபின் உத்தப்பா, நிதிஷ் ரான, சுபமன் கில், ஆண்ட்ரே ரசல் ஆகியோர் உள்ளனர்.

பந்து வீச்சில் முக்கியமாக சுனில் நரேன், பியூஸ் சாவ்லா, குலதீப் யாதவ், டாம் குர்ரான், மிட்செல் ஜான்சன் ஆகியோர் உள்ளனர்.

இந்த அணி நிறைய இளம் வீரர்களே கொண்டுள்ளது இவர்கள் சிறப்பாக செயல்பட்டால் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி மூன்றாவது முறையாக வெல்லும் வாய்ப்பு உள்ளது.

ராஜஸ்தான் ராயல்ஸ்

2 ஆண்டு தடைக்கு பிறகு ராஜஸ்தான் ராயல்ஸ் ஐ.பி.எல்லில் கலந்துகொள்கிறது ஆகையால் கோப்பையை வெல்லும் முனைப்புடன் உள்ளது. ரஹானே தலைமையில் ராஜஸ்தான் ராயல்ஸ் களம்காணுகிறது.

பேட்டிங்கில் முக்கியமாக ரஹானே, பென் ஸ்டோக்ஸ், சஞ்சு சாம்சன், ஹென்றிச் க்ளாஸென், ஜோஸ் பட்லர், ராகுல் திரிபாதி ஆகியோர் உள்ளனர்.

பந்து வீச்சில் முக்கியமாக ஜெயதேவ் உனட்கட், தவான் குல்கர்னி, சமீரா, கிருஷ்ணப்ப கெளதம் ஆகியோர் உள்ளனர்.

இவர்கள் சிறப்பாக செயல்பட்டால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இரண்டாவது முறையாக வெல்லும் வாய்ப்பு உள்ளது.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்

இந்திய அணி கேப்டன் விராட் கோலி தலைமையில் களமிறங்கும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி முதல் முறையாக ஐபிஎல் கோப்பையை வெல்ல ஆவலுடன் உள்ளது.

பேட்டிங்கில் முக்கியமாக விராட் கோலி, எ.பி டீ வில்லியர்ஸ், பிரண்டன் மேக்குல்லம், குயின்டன் டீ காக், மனன் வோரா, பார்திவ் படேல் ஆகியோர் பலமாக உள்ளனர்.

பந்து வீச்சில் முக்கியமாக டிம் சவுதி, கோரி ஆண்டர்சன், சாஹல், கிறிஸ் வோக்ஸ், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் பலமாக உள்ளனர்.

இந்தமுறை எப்படியாவது கோப்பையை வெல்லும் முனைப்பில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் உள்ளது. இவர்கள் சிறப்பாக செயல்பட்டால் கோப்பை சாத்தியமே!

சன்ரைசர்ஸ் ஐதராபாத்

டேவிட் வார்னர் இல்லாமல், கேன் வில்லியம்சன் தலைமையில் களமிறங்கும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு சிறிது பின்னடைவே!

பேட்டிங்கில் முக்கியமாக ஷிகர் தவான், மனிஷ் பாண்டே, கேன் வில்லியம்சன், யூசுப் பதான், பில்லி ஸ்டாண்லகே, சாகிப் அல் ஹாசன் ஆகியோர் பலமாக உள்ளனர்.

பந்து வீச்சில் முக்கியமாக புவனேஸ்வர் குமார், ரஷீத் கான், சித்ததார்த் கவுல், பசில் தம்பி, கிறிஸ் ஜோர்டான் ஆகியோர் பலமாக உள்ளனர்.

இவர்கள் அனைவரும் சிறப்பாக செயல்பட்டால் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி இரண்டாவது முறையாக கோப்பையை வெல்லும் வாய்ப்பு உள்ளது.

[button link=”https://www.truetamil.in/today-news/ipl-2018″ align=”center” target=”_blank” font_weight=”bold” radius=”5″ outer_border=”true” icon=”undefined”]மேலும் ஐ.பி.எல் 2018 செய்திகளுக்கு இங்கு கிளிக் செய்யவும்[/button]

Loading