நான் தொடர்ந்த வழக்கிற்கும் கருணாநிதியின் உடலை அடக்கம் செய்யக் கேட்கும் இடத்திற்கும் தொடர்பில்லை ; அதே நேரத்தில் அரசு எனது வழக்கை காரணம் காட்டி இடம் மறுப்பதால் வழக்கை திரும்பப் பெற்று விட்டேன் – துரைசாமி, வழக்கறிஞர்.
திமுக தலைவர் கருணாநிதியின் மறைவை அடுத்து பீகாரில் 2 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் – பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார்
கருணாநிதியின் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக பிரதமர் நரேந்திரமோடி, ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவ், கேரளா முதலைச்சர் பினராய் விஜயன் உள்ளிட்டோர் நாளை சென்னை வருகின்றனர். சிங்கப்பூர், மொரிசியஸ், மலேசியா போன்ற நாடுகளின் தலைவர்களும் அஞ்சலி செலுத்த வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. உலகம் முழுவதும் உள்ள தமிழ்ச் சங்கத்தின் தலைவர்களும் வருவதாக கூறப்படுகிறது. இதனிடையே தொண்டர்களும் பொது மக்களும் சென்னை நோக்கி குவிந்து வருவதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். 2 Pattalion குழுவினரும் பாதுகாப்பில் ஈடுபட உள்ளனர்.
அண்ணா சமாதி இடம் கடற்கரை ஒழுங்முறை விதிகளின் கீழ் வரவில்லை, சட்ட பிரச்சினை கிடையாது – வழக்கறிஞர் துரைசாமி
மெரினாவில் இடம் வழங்காததால் கோபாலபுரத்தில் பெட்ரோல் ஊற்றிக்கொண்டு தொண்டர் தீக்குளிக்க முயற்சி
திமுக தலைவர் கருணாநிதியின் மறைவுக்கு நடிகர் அஜித்குமார் இரங்கல்.
திமுக தலைவர் கருணாநிதியின் உடலுக்கு அஞ்சலி செலுத்த கோபாலபுரம் இல்லத்திற்கு வந்தார் ரஜினிகாந்த்
திமுக தலைவர் கருணாநிதியின் மறைவுக்கு தெலுங்கு நடிகரும், ஜனசேனா கட்சியின் தலைவருமான பவன்கல்யாண் இரங்கல்.
அரசியல், சமூகம், இலக்கிய துறைகளில் சாதனை செய்த திமுக தலைவர் கருணாநிதிக்கு பாரதரத்னா விருது தர வேண்டும் – திருமாவளவன்
திமுக தலைவர் கருணாநிதியின் உடலுக்கு மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி நேரில் அஞ்சலி.
திமுக தலைவர் கருணாநிதி காலமானதை தொடர்ந்து நாளை தேசியக் கோடி அரைக்கம்பத்தில் பறக்கும் – மத்திய அரசு
மாநிலம் முழுவதிலும் இருந்து திமுக தொண்டர்கள் ரயிலில் சென்னை நோக்கி பயணம்
கிருஷ்ணகிரியில் மரத்தை வெட்டிப்போட்டு சாலை மறியல்
கோபாலபுரம் இல்லத்தில் கலைஞர் உடல்
திமுக தலைவர் கருணாநிதியின் மறைவு என்னை ஆழ்ந்த துயரத்தில் ஆழ்த்திவிட்டது – இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனா
தமிழக மக்களுக்காக ஓய்வின்றி உழைத்தவர் கருணாநிதி, தேசத்திற்கான இவரது பங்களிப்பை மறக்க முடியாது – திமுக தலைவர் கருணாநிதி மறைவுக்கு, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் இரங்கல்
கலைஞர் உடலை அடக்கம் செய்ய மெரினாவில் இடம் ஒதுக்க வேண்டும்- பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை
மதிப்பிற்குரிய அமரர் கலைஞர் அவர்களுக்கு, அண்ணா சமாதி அருகே அடக்கம் செய்ய, தமிழக அரசு எல்லா முயற்சிகளையும் எடுக்க வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். அது தான், நாம் அந்த மாமனிதருக்கு கொடுக்கும் தகுந்த மரியாதை- ரஜினிகாந்த்
கோபாலபுரம் செல்கிறது கருணாநிதி உடல்: சாலையின் இருபுறங்களிலும் குவிந்துள்ள திமுக தொண்டர்கள் கண்ணீர் விட்டு கதறல்.
திமுக தலைவர் கருணாநிதி மறைவுக்கு, பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி இரங்கல்.
தேசிய கொடி அரை கம்பத்தில் பறக்கவிடப்படும். நாளை மத்திய அரசின் அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்படுவதாகவும் அறிவிப்பு!
கருணாநிதி உடலை மெரினாவில் அடக்கம் செய்ய அனுமதிக்க கோரி தொடரப்பட்ட வழக்கை இன்று இரவு 10.30 மணிக்கு விசாரிக்கிறது சென்னை உயர்நீதிமன்றம்..
மெரினாவில் திமுக தலைவர் கருணாநிதியின் உடலை அடக்க செய்ய இடம் ஒதுக்க வேண்டும் – தமிழக அரசுக்கு, கி.வீரமணி, ராமதாஸ், வைகோ, விஜயகாந்த், முத்தரசன், வைரமுத்து வேண்டுகோள்
திமுக தலைவர் கருணாநிதியின் மறைவையொட்டி கர்நாடகாவில் நாளை அரசு பொது விடுமுறை அறிவிப்பு.
இறவா சூரியனின் இறுதி பயணம் காவேரி மருத்துவமனையிலிருந்து கோபாலபுரத்துக்கு பயணம். கண்ணீருடன் பின்தொடரும் உடனபிறப்புக்கள்
மெரினாவில் கருணாநிதி உடலை அடக்கம் செய்ய இடம் கோரி நீதிமன்றத்தை அணுக திமுக முடிவு!
தமிழக அரசின் மறுப்பால் சென்னையில் பதற்றம்!
கருணாநிதியின் மறைவு இயற்கையின் சதி – ராதா ரவி
மெரினாவில் இடம் கொடுக்க வலியுறுத்தி திமுக தொண்டர்கள் மருத்துவமனையில் கோஷமிட்டு வருகின்றனர்….
பிரதமர்களை உருவாக்கிய தலைவர் கருணாநிதி – முதலமைச்சர் நாராயணசாமி
மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் உடலை அடக்கம் செய்ய மெரினாவில் இடம் ஒதுக்குமாறு முதல்வரிடம் ஸ்டாலின் மீண்டும் வேண்டுகோள்..!
வேண்டும் வேண்டும் மெரினா வேண்டும் -காவிரி மருத்துவமனை முன்பு திமுக தொண்டர்கள் முழக்கம். மெரினாவில் இடம் கொடுக்க வலியுறுத்தி திமுக தொண்டர்கள் மருத்துவமனையில் கோஷமிட்டு வருகின்றனர்….
கட்சி நிகழ்ச்சிகள் அனைத்தும் இன்று முதல் ஒத்திவைப்பு திமுக கொடி ஒரு வாரத்திற்கு அரைக்கம்பத்தில் பறக்க விட வேண்டும் – திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன்.
மெரினாவில் அண்ணா நினைவிட வளாகத்திற்குள் கருணாநிதியின் உடலை அடக்கம் செய்ய அனுமதி வழங்க வேண்டும் – தமிழக அரசுக்கு திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் வேண்டுகோள்.
அதிகாலை 4 மணி முதல் ராஜாஜி அரங்கில் மக்கள் அஞ்சலிக்காக கருணாநிதியின் உடல் வைக்கப்படும் – க.அன்பழகன்
திமுக தலைவர் கருணாநிதியின் உடல் இன்று இரவு 8.30 மணி முதல் நள்ளிரவு 1 மணி வரை கோபாலபுரம் இல்லத்தில் உறவினர்களின் அஞ்சலிக்காக வைக்கப்படும் – க.அன்பழகன்
கருணாநிதி மறைவு : அமெரிக்கா இரங்கல்
பிரதமர்களை உருவாக்கிய தலைவர் கருணாநிதி – முதலமைச்சர் நாராயணசாமி
திமுக தலைவர் மு.கருணாநிதி மறைவையொட்டி நாளை (8.8.2018) விடுமுறை அறிவித்துள்ளது தமிழக அரசு…
8.30 முதல் 1.30 மணி வரை கோபாலபுரம் இல்லத்தில் கருணாநிதியின் உடல் வைக்கப்படுகிறது.
தமிழ்ச் சூரியன் தன் வேகத்தை தனித்துக்கொண்டது.
ஓய்வெடுக்காமல் உழைத்தவன் இதோ ஓய்வெடுக்கிறான் என கலைஞரின் கல்லறையில் எழுதப்படுகிறது – திமுக
சட்டச்சிக்கல் இருப்பதால் திமுக தலைவர் கருணாநிதியின் உடலை அடக்கம் செய்ய மெரினாவில் இடம் ஒதுக்கீடு செய்ய இயலவில்லை – தலைமைச் செயலாளர்
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மறைவு தமிழ்நாட்டிற்கு பேரிழப்பாகும் – முதலமைச்சர் பழனிசாமி.
இந்த யுகத்தின் ஈடு இணையில்லா ஒப்பற்ற தலைவர். கலைஞர் அவர்கள் காலமானார் என்கிற செய்தி கேட்டு மிகவும் துயரம் அடைந்தேன்” – விஜயகாந்த், தேமுதிக தலைவர்.
திமுக தலைவர் கருணாநிதியால் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை வேறு எவராலும் நிரப்ப இயலாது – பொன்.ராதாகிருஷ்ணன்.
திமுக தலைவர் கருணாநிதியின் உடலுக்கு அஞ்சலி செலுத்த பிரதமர் மோடி நாளை சென்னை வருகிறார்.
இந்தியா தனது சிறந்த மகனை இழந்துவிட்டது – ராகுல் காந்தி
கட்டுபாடுக் காக்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் வேண்டுகோள்!
திமுக தலைவர் கருணாநிதி மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்.
கலைஞர் மறைந்த நாள் என் வாழ்வின் கறுப்பு நாள் : ரஜினிகாந்த்
சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த திமுக தலைவர் கருணாநிதி சிகிச்சை பலனின்றி காலமானார்.
திமுக தலைவர் கருணாநிதி மாலை 6.10 மணிக்கு காலமானார் – காவேரி மருத்துவமனை அறிக்கை.
கழக உடன்பிறப்புகள் கட்டுபாடுக் காத்து, தலைவர் கலைஞர் அவர்களின் நீங்காப் புகழ் என்றென்றும் நிலைத்து நிற்க செய்திடுக! – திமுக செயல் தலைவர் ஸ்டாலின் வேண்டுகோள்
![]()





