அரசியலுக்கு முழுக்குப்போட்ட நாஞ்சில் சம்பத்! அதிர்ச்சியில் டி.டி.வி தினகரன்!

nanjil sampath

நாஞ்சில் சம்பத் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், டிடிவி தினகரன் புதிதாக அறிவித்துள்ள கட்சியின் பெயரில் தனக்கு உடன்பாடு இல்லையென்றும், அண்ணாவும் , திராவிடமும் இல்லாத டி.டி.வி அணியில் தான் நீடிக்க விரும்பவில்லை என்றும் நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார்.

இனி அரசியல் என்ற சிமிழில் அடைப்பட்டு கிடக்க விரும்பவில்லை என்றும் அரசியலில் இருந்து விலகுவதாகவும் தெரிவித்துள்ள நாஞ்சில் சம்பத், இனிமேல் இலக்கிய மேடைகளில் தன்னை காணலாம் என்றும் கூறியுள்ளார்.

 

கடந்த 15ம் தேதி மதுரை மேலூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் டி.டி.வி.தினகரன் “அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்” என்ற தனது அமைப்பின் பெயரையும், கொடியையும் அறிமுகம் செய்தார்.

இதற்கிடையில், தினகரன் அணியைச் சேர்ந்த புகழேந்தி உள்ளிட்டோர், கன்னியாகுமரி மாவட்டம் மணக்காவிளையில் உள்ள நாஞ்சில் சம்பத் வீட்டுக்கு நேற்று வந்தனர். அவருடன் நடந்த பேச்சுவார்த்தைக்குப் பிறகு, நாஞ்சில் சம்பத் தினகரன் அணியில் தொடருவார் எனத் தெரிவித்தார்.

இந்நிலையில், அமைப்பின் பெயரில் திராவிடம் இல்லை என்றுக் கூறி நாஞ்சில் சம்பத் பொதுக்கூட்டத்தை புறக்கணித்திருந்ததாக தகவல்கள் கசிந்த நிலையில், நாஞ்சில் சம்பத் இந்த முடிவை அறிவித்துள்ளார்.

இன்று காலை மணக்காவிளையில் தனது வீட்டில் செய்தியாளர்களைச் சந்தித்த நாஞ்சில் சம்பத், தினகரனின் செயல்பாடுகள் திராவிடக் கொள்கைக்கு எதிராக இருப்பதாகவும், அதனால் தினகரன் அணியிலிருந்து விலகுவதாகவும் தெரிவித்தார். இனி, இலக்கிய மேடைகளில் பேச இருப்பதாகவும் தெரிவித்தார்.

சி.ஆர். சரஸ்வதி

திராவிடத்தை டிடிவி புறக்கணித்துவிட்டார் என்ற காரணத்தை ஏற்க முடியாது. ஜெயலலிதாவை திராவிடத் தலைவியாகவே பார்க்கிறோம். நாஞ்சில் சம்பத் விலகியது பற்றி அம்மா மக்கள் முன்னேற்றக்கழகத்தின் சி.ஆர். சரஸ்வதி கருத்து தெரிவித்துள்ளார் .

RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு
RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு