கருணாநிதி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார் புஷ்பவன குப்புசாமி..!

கருணாநிதி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார் புஷ்பவன குப்புசாமி..!

மெரினாவில் உள்ள கலைஞர் நினைவிடத்தில் நாட்டுப்புற பாடகர்கள் புஷ்பவன குப்புசாமி, அனிதா குப்புசாமி குடும்பத்தோடு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய புஷ்பவன குப்புசாமி கலைஞர் கருணாநிதி போல் ஒரு தலைவர் இந்த நாட்டில் இனிமேல் பிறந்திட முடியாது அவரது இழப்பு ஒட்டு மொத்த தமிழ் சமுதாயத்திற்கும் பேரிழப்பு என்று தெரிவித்தார்.

அவர் விட்டு சென்ற பணிகளை தமிழ் மக்கள் ஒன்று கூடி செய்ய வேண்டும்.

அனிதா குப்புசாமி பேசுகையில் கருணாநிதி இறந்த பின்பும் போராடி வெற்றி பெற்றுள்ளார் அவர் வழியை அனைவரும் பின்பற்றினால் அனைவருக்கும் வெற்றிதான் என்றும் சென்னையில் மக்கள் போக்குவரத்து நெரிசலின்றி செல்கிறார்கள் என்றால் அது கலைஞர் ஆட்சியில் கட்டப்பட்ட மேம்பாலங்களால்தான் என்று கூறினார்.

பின்னர் கருணாநிதியை வாழ்த்தி “கலைஞர் போல் ஒரு தலைவர் இந்த நாட்டில் இனிமேல் பிறந்திட முடியாது” என்ற பாடலை புஷ்பவன குப்புசாமி பாடினார்.

மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு