இந்தியாவுக்கு இரண்டாவது தங்கம் தந்த சஞ்சிதா சானு!

இந்தியாவுக்கு இரண்டாவது தங்கம் தந்த சஞ்சிதா சானு!

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் 21வது காமன்வெல்த் தொடரில் மகளிருக்கான பளு தூக்குதல் போட்டியில் இந்தியா இரண்டாவது தங்கம் வென்றுள்ளது. இந்தியாவை சேர்ந்த சஞ்சிதா சானு இந்த சாதனையை புரிந்துள்ளார்.

இதன்மூலம், 53 கிலோ பிரிவில் தங்கப்பதக்கம் வென்ற இரண்டாவது இந்தியர் என்ற பெருமையையும், காமன்வெல்த் போட்டிகளின் இரண்டு பிரிவுகளில் தங்கம் வென்ற இரண்டாவது இந்தியர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.

இந்தியாவுக்கு இரண்டாவது தங்கம் தந்த சஞ்சிதா சானு!

2014ம் ஆண்டு போட்டியில் பங்கேற்ற பொழுது காயங்கள் ஏற்பட்டதாகவும் தனது தாய் ஊக்கப்படுத்தியதாகவும் சஞ்சிதா சானு செய்தியாளர்களிடம் மகிழ்ச்சியாக தெரிவித்தார்.

இதையடுத்து 18 வயது இந்திய வீரர் தீபக் லதர் ஆடவருக்கான 69 கிலோ எடைப் பிரிவில் வெண்கலம் வென்றார். மொத்தமாக 295 கிலோ எடையைத் தூக்கி அவர் வெண்கலம் வென்று இந்திய அணிக்கு மற்றொரு பதக்கத்தை அளித்துள்ளார்.
Deepak Lather
இந்திய அணி இதுவரை இரண்டு தங்கம், ஒரு வெள்ளி மற்றும் ஒரு வெண்கலம் என நான்கு பதக்கங்களுடன் பதக்கப்பட்டியலில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது.

#SanjitaChanu #CWG2018 #CommonwealthGames #DeepakLather

மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு