காவிரி உரிமைக்காக போராட்டக் களமாக மாறிய தமிழகம்!

காவிரி உரிமைக்காக போராட்டக் களமாக மாறிய தமிழகம்!

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்தும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரியும் சென்னை உட்பட தமிழகம் முழுவதும் திமுக மற்றும் எதிர்க் கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன.
காவிரி உரிமைக்காக போராட்டக் களமாக மாறிய தமிழகம்!

மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டரில் பதிவில்: காவிரி நம் பிறப்புரிமை. அதனை தட்டிப் பறிக்க முயலும் மத்திய பாஜக அரசிற்கு எதிராகவும், அதற்குத் துணை போகும் குதிரைபேர அதிமுக அரசிற்கு எதிராகவும் மாநிலம் முழுவதும் முழு கடையடைப்பு போராட்டம் வெற்றிகரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. #CauveryManagementBoard அமைக்கும் வரை ஓய மாட்டோம்!”

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மு.க.ஸ்டாலின்

எடப்பாடி அரசின் ஆட்சி எப்படிப்பட்டது என்று கவர்னருக்கு தெரியும் எனவேதான் அவரே சென்று ஆய்வு மேற்கொள்கிறார். ஆட்சியின் அலங்கோலத்தை என்னிடம் சொல்லி வேதனைப்பட்டார் கவர்னர் பன்வாரிலால். அதிமுக அரசு காவிரி மேலாண்மை அமைப்பதற்கு எந்த முயற்சியும் இனி செய்யாது. இன்றையப் போராட்டம் கட்சியின் சார்பாக மட்டும் நடைபெறவில்லை, மக்கள் இந்தப் போராட்டத்துக்கு முழு ஆதரவு. தலைவர்கள் கைது செய்யப்பட்டிருப்பதால் இன்று மாலை நடைபெறவிருந்த அனைத்துக் கட்சிக் கூட்டம் நாளை காலை அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும். போராட்டத்துக்கு துணை நின்ற அனைத்து கட்சியினருக்கு என் தாழ்மையான நன்றி. தமிழகத்தில் இதுவரை இப்படியொரு முழு அடைப்பு போராட்டம் வெற்றிப் பெற்று இருக்குமா என தெரியவில்லை.

காவிரி உரிமைக்காக போராட்டக் களமாக மாறிய தமிழகம்!

உடனடியாக உச்சநீதிமன்றம் தீர்ப்பை மத்திய அரசு அமல்படுத்த வேண்டும். மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு தொடர்ந்து காவேரி மேலாண்மை அமைப்பதில் காலம் தாழ்த்துகிறது. இதற்கும் மத்திய அரசு செவி சாய்க்கவில்லை என்றால் அடுத்தக் கட்டப் போராட்டம் குறித்து யோசிப்போம் என்று கூறினார்.

RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு
RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு