More than 70 passports stolen from BLS International, serving Indian

மார்ச் 12, அமெரிக்காவில் இந்திய தூதரகத்துக்கு ஒப்பந்த முறையில் பாஸ்போர்ட் சேவைகளை வழங்கி வரும் தனியார் நிறுவனத்தில் இருந்து 70 பாஸ்போர்ட்டுகள் திருடப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

நியூயார்க் மாகாணத்தின் சான் பிரான்சிஸ்கோ நகரில் பிஎல்எஸ் என்ற தனியார் நிறுவனம், இந்திய தூதரகத்துக்காக ஒப்பந்த முறையில் அமெரிக்காவுக்கான விசா மற்றும் பாஸ்போர்ட் தொடர்பான சேவைகளை வழங்கி வருகிறது.

இந்த நிறுவனத்திலிருந்து கடந்த ஆண்டு நவம்பர் 29ஆம் தேதி 70 பாஸ்போர்ட்டுகள் திருடப்பட்டுள்ளதாக அதன் அதிகாரிகள் அமெரிக்க வெளியுறவுத்துறை மற்றும் உரிய அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளனர். இதுகுறித்து சான் பிரான்சிஸ்கோ காவல்துறையினர் டிசம்பர் மாதம் விசாரணையைத் தொடங்கியுள்ளனர் என்று இந்திய-அமெரிக்க பத்திரிகை தெரிவித்துள்ளது.

திருடப்பட்ட 70 பாஸ்போர்ட்டுகளும் தவறான வகையில் உபயோகப்படுத்துவதை தடுக்கும் விதமாக, இந்திய தூதரகம் அவற்றை ரத்து செய்துள்ளது.

Loading