மே மாதம் 1-ம் தேதி உழைப்பாளர் தினமான மே தினத்தையொட்டி திருவள்ளூர் மாவட்டத்தில் அனைத்து மதுபான கடைகள் மற்றும் அதைச் சார்ந்த பட்டிகளுக்கு (பார்களுக்கு) விடுமுறை அளிக்கப்படுகிறது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கொ. வீரராகவ ராவ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்:-
தமிழ்நாடு மதுபான உரிமம் மற்றும் அனுமதி விதிகள் 1981- மற்றும் தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை கடைகள் மற்றும் மதுக்கூடங்களின் விதிகள் 2003-ன்படி, மே மாதம் 1-ம் தேதி உழைப்பாளர் தினமாக கொண்டாடப்படுகிறது.
இதையொட்டி மே தினத்தை முன்னிட்டு, திருவள்ளுர் மாவட்டத்தில் இயங்கிவரும் விற்பனை செய்யும் மதுபான கடைகள் மற்றும் அதனைச் சார்ந்த மதுக்கூடங்கள், சங்கம்(கிளப்புகள்), உணவகங்கள் அமைந்துள்ள அனைத்தும் மே 1-ம் தேதி கண்டிப்பாக மூடப்பட வேண்டும். இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
![]()

