உழைப்பாளர்கள் தினம்!- தமிழக முதல்வர் ஜெயலலிதா வாழ்த்துச் செய்தி !

jeya

உழைப்பாளர்கள் தினம்!- தமிழக முதல்வர் ஜெயலலிதா வாழ்த்துச் செய்தி !

மே தினத்தை ஒட்டி, முதல்வர் ஜெயலலிதா தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். இது குறித்து புதன்கிழமை அவர் வெளியிட்ட வாழ்த்துச் செய்தி:

உழைக்கும் வர்க்கம் உரிமைகளை வென்றெடுத்த உன்னதத்தைக் கொண்டாடி மகிழும் தினம் மே தினமாகும். இந்த நன்னாளில் உழைக்கும் தொழிலாளர்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த நல்வாழ்த்துகளைத் தெரிவிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

உழைக்கும் தொழிலாளர்களின் உரிமைகளுக்கு உலகளாவிய முக்கியத்துவம் அளிக்கும் வகையில் இந்நாள் நாடுகளின் எல்லைகளைக் கடந்து உலகத் தொழிலாளர்கள் அனைவருக்கும் உரித்தான நாளாகக் கொண்டாடப்படுகிறது.

உழைப்பே உயர்வு தரும்; மனநிறைவு தரும் ஒளிமயமான எதிர்காலத்திற்கு வழிவகுக்கும் என்ற நம்பிக்கையோடு, தளர்வறியா உழைப்பின் மூலம் நமது நாட்டின் பெருமையை உயர்த்தி வரும் தொழிலாளர் பெருமக்கள் அனைவருக்கும் உளமார்ந்த “மே” தின நல்வாழ்த்துகள் என்று  முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு