ஆக-15ல் சம்பா சாகுபடிக்கு மேட்டூர் அணையில் தண்ணீர் திறப்பு!

mettur-dam

ஆகஸ்ட் 8, காவிரி டெல்டா விவசாயிகள் சம்பா நெல் சாகுபடி மேற்கொள்ள, வரும் 15-ஆம் தேதி முதல் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.

ஆகஸ்ட் 15-இல் திறப்பு: கர்நாடகம், கேரள மாநிலங்களில் காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில், இப்போது தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்து தொடர் மழை பெய்து வருகிறது.

இதனால், கர்நாடகத்திலுள்ள முக்கிய அணைகளான ஹாரங்கி, ஹேமாவதி, கிருஷ்ணராஜசாகர், கபினி அணைகளில் இருந்து அதிக அளவில் தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

இதனால், மேட்டூர் அணையின் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்து, புதன்கிழமை மாலை நிலவரப்படி 93.24 அடியாக, அதாவது 56.432 டி.எம்.சி. உயர்ந்துள்ளது. தொடர்ந்து மேட்டூர் அணைக்கு கணிசமான நீர் வந்து கொண்டிருக்கிறது.

மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு