உடைகிறதா ஆம் ஆத்மி? அசோக் அகர்வாலும் ராஜினாமா!

 Ashok Agarwal quits Aam Aadmi Party

மார்ச் 12, பாராளுமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி போட்டியிடுவதையட்டி, அதன் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால், நாடுமுழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து தீவிர தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார். ஒருபுறம் ஆம் ஆத்மி கட்சியில் புதிய உறுப்பினர்கள் சேர்ந்தாலும், மறுபுறம் கட்சியின் நிர்வாகிகள் ராஜினாமா செய்து வருகின்றனர்.

அந்தக் கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் அசோக் அகர்வால் நேற்று தனது பதவியை ராஜினாமா செய்தார். அவர் கட்சி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அனுப்பியுள்ள ராஜினாமா கடிதத்தில், ஆரம்ப காலங்களில் கட்சியை உருவாக்கவும் வளர்க்கவும் பாடுபட்டதாகவும், ஆனால் தற்போது கட்சி திசை மாறிச்சென்று, தனியார் நிறுவனம்போல செயல்படுவதாகவும் மக்களின் நம்பிக்கையை இழந்து விட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.தேசிய நிர்வாகி ராஜினாமா செய்துள்ளதன் மூலம், ஆம் ஆத்மி கட்சிக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு