காணாமல்போன விமான பயணிகளின் மொபைல் போன்கள் தொடர்ந்து ஒலிப்பது எப்படி? – அமெரிக்க அதிகாரி விளக்கம்.

malasian accident

மார்ச் 14, கடந்த சில நாட்களாக உலகே தேடிக்கொண்டிருக்கும் மலேசியா விமானத்தில் உள்ள சில பயணிகளின் செல் போன்கள் தொடர்ந்து ஒலிப்பது எப்படி என்று அமெரிக்க செல் போன் நிறுவன அதிகாரி ரிட்ச் பிளாஸி விளக்கம் கொடுத்துள்ளார்.

இவர், கொம்யூனிகானோ என்ற மொபைல் மற்றும் ஒயர்லெஸ் கன்சல்டேஷன் நிறுவனத்தின் வைஸ் பிரஸிடென்ட். இதற்குமுன், அமெரிக்க டெலிகம்யூனிகேஷன் மெகா நிறுவனம் AT&T-ல் 35 ஆண்டுகள் பணியாற்றியவர்.

என்ன சொல்கிறார் இவர்?

“ஒரு செல்போன் இயங்க வேண்டுமானால், முதலில் ‘ஆன்’ பண்ணப்பட வேண்டும். பின்னர் சிக்னல் கிடைக்க வேண்டும். அதற்கு, டெலிகாம் நெட்ஒர்க் ஒன்றுடன் கனெக்ட் பண்ணப்பட வேண்டும்.

மாயமான மலேசியன் ஏர்லைன்ஸ் விமான பயணிகள் சிலரின் செல்போன்களில் ரிங் போகிறது என்றால், கண்டிப்பாக அந்த போன் ‘ஆன்’ பண்ணப்பட்டு, சிக்னல் கிடைக்கிறது என்று அர்த்தமில்லை.

குறிப்பிட்ட சில செல் வழங்குனர் நிறுவனங்களின் (cellular carrier) சிஸ்டத்தில் ஒரு கிளிச் உண்டு. அது என்னவென்றால், அந்த நிறுவனத்தால் வழங்கப்பட்ட இணைப்புக்குரிய போனை தொடர்பு கொண்டால், அவர்களது சிஸ்டம் ஆடோமேடிக்காக போன் லொகேஷனை தேட தொடங்கும். இந்த தேடலுக்கு, வழமைக்கு மாறாக சிறிது அதிக நேரம் எடுத்தால்… அதுவரை அந்த சிஸ்ட்டத்தில் டிஃபால்ட் ஆகியுள்ள நம்பரில் ரிங் போகும்” என்கிறார் ரிட்ச் பிளாஸி.

மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு
மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு