கூவம் நதியை சுத்தப்படுத்த ரூ.3,834 கோடியில் திட்டம்!

Govt allocates Rs 3834 crore for Cooum restoration

சென்னை நகரில் கூவம் நதி ரூ.3834 கோடி செலவில் சீரமைக்கப்படும என்று தமிழக பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது?. தமிழக அரசின் 2014_2015ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை முதலமைச்சர் ஜெயலலிதா முன்னிலையில் சட்டப்பேரவையில் நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.

தமிழக பட்ஜெட்டில் கூறியிருப்பதாவது:_இத்திட்டத்திற்காக 2014_2015 ஆண்டு வரவு_செலவு திட்டத்தில் ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் உள்ள ஆறுகளில் கழிவு நீர் 337 இடங்களில் கலக்கின்றன. அதில் 179 இடங்களில் தடுத்து, இந்த ஆறுகளைச் சீரமைப்பதற்காக ரூ.150 கோடி செலவில் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இப்பணிகள் வரும் 2015_ல் முடிவடையும். ரூ.163 கோடி செலவில் 2014_2015 ஆண்டில் மீதமுள்ள 158 இடங்களிலும் பணிகள் தொடங்கப்படும்.

கூவம் நதியை முழுமையாகச் சீரமைத்து மீட்டெடுப்பதற்கான ஒரு பெரும் திட்டம் வரும் நிதியாண்டில் செயல்படுத்தப்படும். மொத்தம் ரூ.3,833.62 கோடி மதிப்பீட்டிலான இந்தப் பெரும் திட்டம் ஐந்து ஆண்டுகளில் செயல்படுத்தப்படும். பாதிக்கப்படக்கூடிய குடும்பங்களுக்கு நிவாரணம் அளிக்கவும் மறுகுடியமர்வு செய்யவும் ரூ.2,077.29 கோடி செலவிடப்படும். இத்திட்டத்தை ‘சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளை’ ஒருங்கிணைப்பு அமைப்பாக இருந்து செயல்படுத்தும்.

சென்னை நகரில் உள்ள கூவம் நதி 3834 கோடி ரூபாய் செலவில் சீரமைக்கப்படும். இதற்கென இந்த நிதியாண்டில் ரூ. 500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை செயல்படுத்தும்போது பாதிக்கப்படக்கூடிய குடும்பங்களுக்கு நிவாரணம் அளிக்கவும், மறு குடியமர்வு செய்யவும் சுமார் 2000 கோடி ருபாய் செலவிடப்படும்.

சாலைக் கட்டமைப்பு மேம்பாட்டிற்கு 2014_2015_ம் ஆண்டு இந்த ஒதுக்கீடு ரூ.2800 கோடியாக மேலும் உயர்த்தப்படும். 2014_2015_ம் ஆண்டில் இத்திட்டத்தில் 1500 கி.மீ நீளமுள்ள சாலைகளை அகலப்படுத்தவும், 3500 கி.மீ நீளமுள்ள சாலைகளை மேம்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

ரெயில்வே பாலப்பணிகள் திட்டத்துக்காக 2014_2015_ம் ஆண்டு ரூ.683.63 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தொழிற்சாலைகள் உள்ள பகுதிகளில் சாலைக் கட்டமைப்பை வலுப்படுத்தவதற்காக செயல்படுத்தப்படும் ரூ.86.65 கோடி இத்திட்டத்தின் இரண்டாவது கட்டப்பணி 2015_ம் ஆண்டு செப்டம்பர் மாதத்திற்குள் முடிக்கப்படும்.

சென்னை வெளிவட்டச் சாலையின் முதல் கட்டப்பணிகள் ரூ.1081.40 கோடி செலவில் மேற்கொள்ளப்பட்டு நிறைவடையும் நிலையில் உள்ளது. இரண்டாவது கட்டப்பணி ரூ.1075 கோடி செலவில் வரும் மார்ச் மாதம் தொடங்கப்படுகிறது.

இந்த அரசு செயல்படுத்த முனைந்துள்ள பெரும் திட்டங்களுள் சென்னை சுற்றுவட்டச் சாலையும் ஒன்றாகும். ஜப்பான் பன்னாட்டுக் கூட்டுறவு நிறுவனத்தின் கடன் உதவியோடு இத்திட்டத்தைச் செயல்படுத்த இந்த அரசு உத்தேசித்துள்ளது. இதுதவிர, சென்னை மாநகரப் பகுதிகளில், பாலங்கள், சாலைகள், ரயில்வே மேம்பாலங்கள் ஆகிய வற்றிக்கான 17 திட்டங்களை நிறைவேற்ற ரூ.2000 கோடி நிதியுதவியை ஜப்பான் பன்னாட்டுக் கூட்டுறவு நிறுவனத்திடமிருந்து பெற்றுப் பணிகளைத் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

தமிழ்நாடு சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் இரண்டாவது கட்ட திட்டத்தின் கீழ் ரூ.9061 கோடி செலவில் முக்கியச் சாலைகளை மேம்படுத்த 2049 கி.மீ நீளமுள்ள சாலைகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

போக்குவரத்து வசதியை மேம்படுத்த கடந்த மூன்று ஆண்டுகளில் ரூ.697.96 கோடி செலவில் 3994 புதிய பேருந்துகள் பயன்பாட்டிற்குக் கொண்டுவரப்பட்டுள்ளன. 2014_2015_ம் ஆண்டில் ஜவஹர்லால் நேரு தேசிய நகர்ப்புற புனரமைப்புத் திட்டத்தின் இரண்டாவது கட்டத்தில் ரூ.200 கோடி செலவில் பழைய பேருந்துகளை மாற்ற 1000 புதிய பேருந்துகள் வாங்கப்படும்.

மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு
மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு