சென்னையில் தயாரான ” தி டர்பூஷ்ட்டர்” அனிமேஷன் படத்திற்கு சர்வதேச அளவில் பாராட்டுக்கள்.

The turboosters

மார்ச் 21, சென்னையைச் சேர்ந்த அகரம் அனிமேஷன் ஸ்டுடியோ தயாரித்த “தி டர்பூஸ்ட்ர்ஸ்” ஹோம் வீடியோ மற்றும் சர்வதேச டெலிபிலிம் ஆகிய இரண்டு பிரிவுகளில் விருதுகளை வென்று சாதனை படைத்துள்ளது. சென்னையை சேர்ந்த அனிமேஷன் ஸ்டுடியோ இந்த பட்டத்தை வெல்வது இதுவே முதல் முறை.

ஹெச்.டி தரம் கொண்ட அனிமேஷன் தொலைக்காட்சி திரைப்படமான இந்தப்படம் 9 முதல் 14 வயதுள்ளவரை  இலக்காக கொண்ட சாகசம் மற்றும் அறிவியல் வெறியர்களுக்கான கார்ட்டூன் திரைப்படம். ஆபத்தில் இருந்து தங்கள் பள்ளியை காப்பாற்ற முயற்சிக்கும் மூன்று குழந்தைகளை சுற்றி வருவது தான் இந்தப்படத்தின் கதை. கதையில் அறிவியல் உணர்வுகள் மற்றும் இயற்கைக்கு கூறுகள் உள்ளன. அனைத்து எழுத்துக்கள் மிகவும் கவனமாக குழந்தகளின் சுவை மற்றும் எதிர்பார்ப்புக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தை கே.ச.அருண், சு.தமிழழகன், கே.ர.தினகர் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். படத்தின் கதை மற்றும் இயக்குனர் திரு.எ.கே.சுதாகர். திரைக்கதை, வசனம் திரு. அபிசேக் கிருஷ்ணன். 2010 இல் தொடங்கிய அகரம் இன்போடேச் பிரைவேட் லிமிடெட் இப்பொழுது 100 பெயர் கொண்ட குழுவுடன் செயல்படுகிறது.

சாப்ட்வேர் மற்றும் அனிமேஷனை மையமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. இந்திய நிறுவனங்களின் கூட்டமைப்பான FICCI (ஃபிக்கி ), 1927-ல் துவங்கப்பட்டது. மகாத்மா காந்தியின் ஆலோசனைப்படி ஜி.டி. பிர்லா மற்றும் புருஷோத்தம் தாஸ் தகுர்தாஸ் ஆகியோரால் நிறுவப்பட்டு தலைநகர் டெல்லியில் இருந்து செயல்படுகிறது. FICCI (ஃபிக்கி ) ஒரு அரசு சாரா, இலாப நோக்கற்ற அமைப்பு. இந்தியாவில் 11 மாநில்களிலும், உலக அளவில் 8 நாடுகளிலும் இருந்து செயல்படுகிறது.

சிறந்த அனிமேஷன் ஃப்ரேம்ஸ் BAF விருதுகள், அனிமேஷன் துறையில் மாணவர்கள் மற்றும் நிருவனங்களை அங்கீகரிக்க 2004 ஆம் ஆண்டில் ஃபிக்கி யால் தொடங்கப்பட்டது. இந்தியவில் முதல் முதலாக அனிமேஷன் மற்றும் இல்லாது விஷுவல் எஃபெக்ட்ஸ் (VFX ) மற்றும் கேமிங் துறைகளிலும் விருதுகளை வழங்கி வருகிறது.

இப்போது உலகம் முழுவதும் இருந்து பல பெரிய நிறுவனங்கள் இந்த போட்டியில் கலந்து கொள்கின்றன. 12-வது முறையாக மார்ச் 12, 2014, ஹோட்டல் ரெணைச்சன்ஸ், போவாய் , மும்பையில்  நடைபெற்ற BAF விருது வழங்கும் விழாவில் 600 விண்ணப்பித்தனர். அதில் 30 விண்ணப்பங்கள் பரிந்துரைக்கபட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு
RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு