ஜன் லோக்பால் மசோதாவிற்கு டெல்லி ஒப்புதல்

arvind-kejriwal

டெல்லி மாநில அமைச்சரவை கூட்டம் இன்று முதலமைச்சர் கெஜ்ரிவால் தலைமையில் கூடியது. அப்போது நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட ஜன் லோக்பால் மசோதாவை டெல்லி மாநிலத்தில் அமுல்படுத்த ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி மாநில முதலமைச்சர் முதல் கடைநிலை ஊழியர்கள் வரை இச்சட்ட முன் வடிவிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளனர். இதில் எவருக்கும் பதவியை கருத்தில் கொண்டு முன்னுரிமை வழங்கப்படவில்லை என அம்மாநில பொதுப்பணித்துறை அமைச்சரான மணிஷ் சிசோடியா தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட இம்மசோதாவை அமைச்சரவை ஒப்புதலுக்குப் பின் மத்திய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட மாட்டாது எனவும் அவர் தெரிவித்தார். லோக்பால் அமைப்பின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் தேர்வுக்குழுவின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்றும் அவர்களது செயல்பாட்டில் எவ்வித அரசியல் குறிக்கீடும் இருக்காது எனவும் வெளிப்படையான முறையில் தங்கள் செயல்பாடு இருக்கும் என அவர் தெரிவித்தார்.

RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு
RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு