H Raja

விவசாயிகளுக்கு ஆதரவாக கேள்வி எழுப்பிய செய்தியாளர்கள், திருமா, வைகோ உள்ளிட்டோரை இந்தியாவிற்கு எதிரானவர்கள் என்று கடுமையாக திட்டிய பாஜக திரு. எச். ராஜாவுக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

தங்களுக்கு மாற்றாக சிந்திப்பவர்களை பயங்கரவாதிகள், தீவிரவாதிகள், நாட்டிற்கு விரோதமானவர்கள் என்று பாஜக விமர்சிப்பது வழக்கமாக கொண்டுள்ளது. அண்மையில் பத்திரிகையாளர்களை சந்தித்த பாஜகவின் எச். ராஜாவிடம், விவசாய கடனை தள்ளுபடி செய்யாதது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. வரிகட்டிய எங்களை விடுத்து யாருக்கோ உதவுவதில் என்ன லாபம் என்றும் கேள்வி எழுந்தது. உடனே கடுப்பான ராஜா, நீங்கள் இந்தியாவிற்கு எதிரானவர் என்று திரும்ப திரும்ப கூறி பேட்டியை முடித்துக்கொள்வதாக வேலியறுவது போல் நடித்தார்.

மிரட்டலுக்கு அஞ்சாத பத்திரிகையாளர் தொடர்ந்து கேள்வியை வீச கடுப்பான ராஜா, நீங்கள் மோடிக்கு எதிரானவர் என்றார். பிறகு கோபத்தின் உச்சிக்கு சென்ற ராஜா, திருமாவளவன், வைகோ உள்ளிட்டோரையும் நாட்டிற்கு எதிரானவர்கள், பிரிவினைவாதிகள் உள்ளிட்ட பல்வேறு வார்த்தைகளால் திட்டினார். தங்களுக்கு இணக்கமாக இல்லாதவர்களை இப்படி திட்டுவதை வழக்கமாக கொண்ட பாஜக செய்தியாளர்களிடமும் காட்டத் துவங்கியுள்ளது நாடுமுழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Loading