மத்திய அரசிடம் அனுமதி பெற்றுதான் மசோதாவை சட்டசபையில் தாக்கல் செய்ய வேண்டும் என்று உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டு இருப்பதற்கு அவர் கடும் கண்டனம் தெரிவித்தார். இந்த மசோதாவை நிறைவேற்ற எந்த எல்லைக்கும் போவேன் என்று டெல்லி முதல்–மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் எச்சரித்து இருந்தார்.
மசோதா வருகிற 16–ந்தேதி இந்திரா காந்தி மைதானத்தில் வைத்து பொதுமக்கள் முன்னிலையில் தாக்கல் செய்யப்படும் என்று டெல்லி அரசு கூறியிருந்தது. அதற்கான பணியை அரசு தொடங்கிவிட்டது.
ஆனால் பாதுகாப்பு காரணமாக சட்டசபையை மைதானத்தில் நடத்த போலீசார் சம்மதிக்கவில்லை. இதேபோல் டெல்லி துணை நிலை கவர்னர் நஜீப் ஜங்கும் தனது கருத்துகளை தெரிவித்தார். ஆனால் கெஜ்ரிவால் அதனை கேட்கவில்லை.
தொடர்ந்து தனது நிலைப்பட்டில் உறுதியாக உள்ளார். இந்நிலையில் மசோதாவை சட்டசபைக்கு வெளியே மைதானத்தில் தாக்கல் செய்வதில் உங்களுடைய நோக்கம் என்ன என்பது குறித்து பதில் அளிக்க டெல்லி கெஜ்ரிவால் அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
மேலும் சட்டசபைக்கு வெளியே சட்டசபை நடத்துவதற்கு எந்த விதிமுறையும் உள்ளதாக என்று அரசுக்கு டெல்லி கோர்ட்டு கேள்வி எழுப்பியுள்ளது.
![]()

