புதுச்சேரிக்கு தனி மாநில அந்தஸ்து : ஜெயலலிதா வாக்குறுதி

Oust Congress to make India strong and safe: Jayalalithaa

மார்ச் 28, அதிமுக அங்கம் வகிக்கும் கூட்டணி மத்திய ஆட்சிக்கு வந்தால் புதுச்சேரிக்கு தனி மாநில அந்தஸ்து வழங்கப்படும் என தமிழக முதல்வர் ஜெயலலிதா தேர்தல் வாக்குறுதி அளித்துள்ளார்.

புதுச்சேரி மக்களவை தொகுதி அதிமுக வேட்பாளர் ஓமலிங்கத்தை ஆதரித்து உப்பளம் துறைமுக மைதானத்தில் வியாழக்கிழமை தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடைபெற்றது.

அதில் பங்கேற்ற முதல்வரும், பொதுச் செயலாளருமான ஜெயலலிதா பேசியதாவது:

இந்திய பொருளாதாரத்தை சீரழித்த காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசை மக்கள் தூககி எறிய வேண்டும். இத்தேர்தல் மக்கள் விரோத ஆட்சியை முடிவுக்கு கொண்டு வரும் தேர்தல், மக்களாட்சியை நிலைநாட்டும் தேர்தல். ஊழல், கொடுங்கோல் ஆட்சிக்கு மக்கள் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். மக்களாட்சி மலர வேண்டும். மத்தியில் அதிமுக அங்கம் வகிக்கும் ஆட்சி அமைய வேண்டும். அப்போதுதான் உங்கள் கோரிக்கைகள் வென்றெடுக்கப்படும். இதனடிப்படையில் அதிமுக வேட்பாளர் ஓமலிங்கத்தை மகத்தான வெற்றி பெற செய்யவேண்டும்.

கடந்த 2011-ம் ஆண்டு பேரவை தேர்தலில் அதிமுக மற்றும் என்ஆர்.காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்களுக்கு வாக்களிக்கும்படி நான் கோரினேன். அதன்படி நீங்கள் வாக்களித்தீர்கள். அதிமுக மற்றும் என்ஆர். கூட்டணி வேட்பாளர்களைகத்தான வெற்றி பெறசெய்தீர்கள்.

என் ஆர்.காங்கிரஸ் கட்சி தனி பெரும்பான்மை பெறவில்லை. அதிமுகவை புறக்கணித்துவிட்டு சுயேச்சை ஆதரவுடன் ஆட்சியமைத்தார் ரங்கசாமி. என் வேண்டு காளை ஏற்று வாக்களித்த உங்கள் எண்ணத்திற்கு முற்றிலும் மாறாக அவர் நடந் துகொண்டார். அவர் அதிமுகவிற்கு மட்டும் துரோகம் இழைக்கவில்லை, உங்களுக்கும் துரோகம் இழைத்துவிட்டார் என்றார்.

மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு
மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு