alagiri-karu

மார்ச் 21, கருணநிதியுடன் சந்திப்பை தவிர்பதற்காகவும், தன்னால் தனது ஆதரவாளர்களுக்கு பாதிப்பு வரக் கூடாது என்பதற்காகவும், வருகிற ஏப்ரல் மாதம் 10 ஆம் தேதி அமெரிக்கா செல்ல, அழகிரி திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

திமுக தனித்து நின்றால்கூட தேர்தலில் வெற்றி பெறும், தேமுதிகவுடன் கூட்டணி வைத்தால் காணமால் போய்விடும் என்று கூறியதால் அழகிரி திமுகவில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டார்.

இதனையடுத்து தனது ஆதரவாளர்களுடன் கடந்த ஜனவரி 30 ஆம் தேதி தமது பிறந்த நாளை வெகுவிமர்சையாக கொண்டாடினர், அந்த கூட்டத்தில் அழகிரியின் ஆதரவாளர்கள் கே.பி. ராமலிங்கம், ரித்தீஷ், நெப்போலியன் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதனயைடுத்து மக்களை தேர்தல் வேட்பாளர் பட்டியலில் அழகிரி உட்பட இவர்கள் அனைவரும் புறக்கணிப்பட்டனர்.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது ஆதரவாளர்களுடன் மதுரையில் அழகிரி ஆலோசனை நடத்தினார். அப்போது ஆதரவாளர்களிடம் பேசிய அவர்,திமுக தலைவர் நெருக்கடி மற்றும் நிர்பந்தத்தில் இருக்கிறார். முதலில் அவரைக் காப்பாற்ற வேண்டும். அடுத்ததாக திமுகவையும் பாதுகாக்க வேண்டும் என்று குறிப்பிட்டார்

இதற்கிடையே தென் மாவட்டங்களில் திமுக வேட்பாளர்களுக்கு எதிராக மு.க.அழகிரி ஆதரவாளர்கள் ரகசிய கூட்டங்கள் நடத்தி ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. இந்த தகவலால் அதிர்ச்சி அடைந்த திமுக தலைமை, கட்சியினர் யாரும் அழகிரியுடன் தொடர்பு வைத்துக்கொள்ள கூடாது என எச்சரிக்கைவிடுத்தது.

மேலும் மு.க.அழகிரியுடன் தொடர்புடைய 20 மாவட்டங்களைச் சேர்ந்த திமுகவின் முக்கிய நிர்வாகிகள் பட்டியலை திமுக தயாரித்தது. இவர்கள்தான் திமுக வேட்பாளர்களுக்கு எதிராக வேலை செய்வதும் தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து மு.க.அழகிரியுடன் தொடர்புடைய நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் அறிவித்தார்.

இந்த சூழலில் திமுக தலைவர் கருணாநிதி மதுரையில் 3 நாட்கள் தங்கியிருந்து பிரசாரம் மேற்கொள்கிறார். இதனையடுதது கருணநிதியுடன் சந்திப்பை தவிர்பதற்காகவும், தன்னால் தனது ஆதரவாளர்களுக்கு பாதிப்பு வரக் கூடாது என்பதற்காகவும், வருகிற ஏப்ரல் மாதம் 10 ஆம் தேதி அமெரிக்கா செல்ல, அழகிரி திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

 

Loading