மந்திரவாதியும் மலேசியா விமானமும்!

magic man

மார்ச் 13, மாயமான மலேசிய விமானம் ரேடார் தொடர்பை இழந்த பின்னும் நான்கு மணி நேரங்கள் தாழ்வானபகுதியில் வானில் பறந்துள்ளது என்று அமெரிக்க விசாரணை அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர் என்று அந்நாட்டு வால் ஸ்ட்ரீட் பத்திரிக்கை தகவல் தெரிவித்துள்ளது. மாயமான விமானத்தில் இருந்து பெறப்பட்ட தகவல்களை கொண்டு இந்த சந்தேகம் எழுந்துள்ளது.

விமான கன்ட்ரோல் அறைக்கு தன்னிச்சையாக தகவல்களை அனுப்பும் விமானத்தின் கருவியின் தகவல்களை கொண்டு இந்த சந்தேகம் எழுந்துள்ளது. இதனால் விமானம் கடத்தி மறைத்து வைக்கப்பட்டுள்ளதா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இந்நிலையில் விமானத்தை தேடும் பணியில் பல நாடுகளும் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. ஆனால் விமானம் கண்டுபிடிக்கப்படவில்லை. இந்நிலையில் சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ள மலேசிய அரசு மந்திரவாதியை நாடியுள்ளது.

மலேசிய அரசு புகழ்பெற்ற மந்திரவாதி இப்ராகிம் மத் ஸின் என்ற மந்திரவாதியை கோலால்பூர் விமான நிலையத்துக்கு வரவழைத்து காணாமல் போன விமானம் தற்போது எங்கு உள்ளது என்று கண்டுபிடித்து கூறுமாறு கேட்டுக் கொண்டுள்ளது. மந்திரப் பொருட்களை வைத்து மாயமந்திரங்கள் செய்த மந்திரவாதி; விமானம் தற்போது பறந்து கொண்டிருக்க வேண்டும். இல்லையென்றால் நிச்சயம் அது விபத்துக்குள் சிக்கி நீருக்கடியில் இருக்கும் என்று கூறியுள்ளார். அவரது கருத்து பலருக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனாலும் சிலர் அவரது கருத்து ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளனர்.
மந்திரவாதி இளநீர் மற்றும் பல்வேறு பொருட்கள் எதற்கு தேவை என்று பதில் சொல்லவில்லை.

மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு
மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு