American student

மார்ச் 13, உலகையே உலுக்கி கொண்டிருக்கும் மலேசிய விமானத்தை பற்றி ஆச்சரியமும், அதிர்ச்சியும் அடையும் அளவுக்கு அமெரிக்காவின் ஸ்டாண்ட் போர்ட் பல்கலைக்கழக மாணவர் ஆண்ட்ரூ தியரி ஒன்றை இணைய தளம் ஒன்றில் வெளியிட்டுள்ளார்.

மாயமான விமானம் போயிங் 777 வகையை சேர்ந்த்தது, இந்த வகை விமானங்களில் முதுகுப்புறம் சாட்கோம் அடாப்டர்கள் உள்ளன. இவை துருப்பிடிக்கக்கூடியது. (இதன் இருப்பிடத்தை மேலேயுள்ள படத்தில் காணலாம்)

விமானத்தின் முதுகுப்பகுதியில் பிளவு ஏற்பட்டால் என்ன ஆகும்? விமானத்திற்குள் ஆக்ஸிஜன் அளவு குறைந்து கொண்டே போய், மயக்கம் ஏற்பட்டு, இறுதியில் சுவாசமே நின்று போகும்.

கிட்டத்தட்ட 120 விமானங்களில் இந்தக் கோளாறுகள் இருப்பதாக செப்டம்பர் 26, 2013ம் தேதி வெளியான FAA அறிக்கை கூறியுள்ளது.
இதற்கு முன்னர் ஒரு போயிங் 777 வகை விமானத்தில் 40.6 செ.மீ அளவுக்கு ஒரு பிளவு ஏற்பட்டு விபத்து ஏற்பட்டதாக FAA ரிப்போர்ட் ஒன்று கூறுகிறது.

மலேசிய விமானம் MH370க்கும் இதே கதி ஏற்பட்டிருக்கலாம். திடீரென பிளவு ஏற்பட்டதும் முதலில் சாட்டிலைட் தொடர்புகள் அனைத்தும் முழுவதுமாக துண்டிக்கப்பட்டிருக்கும். அதே நேரத்தில் ஆக்ஸிஜன் அளவு கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து கொண்டே வந்திருக்கும். அதைப்பற்றி உணர்வதற்குள் பைலட்டுகளும், பயணிகளும் தாங்களே அறியாமல் ஆழ்ந்த உறக்கத்துக்கும், மயக்கத்துக்கும் உள்ளாகியிருப்பார்கள்.

ஆனாலும் ஆட்டோ பைலட் நிலையில் இருந்த விமானம் தொடர்ந்து அதே உயரத்தில் பறந்திருக்கலாம். பின்னர் விமானத்துக்குள் அழுத்தம் குறைவு மற்றும் எரிபொருள் காலியானது காரணமாக கிழக்கு சைனா அல்லது பசிபிக் கடலில் விழுந்திருக்கலாம். என்ற அதிர்ச்சி தகவலையும் வெளியிட்டுள்ளார்.

Loading