மாயமான விமானம் திரும்பி சென்றது தெரிந்ததும் மலேசிய அரசு அலட்சியப்படுத்தியதா- பரபரப்பு தகவல்கள்!.

malasian accident

மாயமான மலேசிய விமானத்தின் நிலைமை மர்மமாகவே உள்ள நிலையில் வெளிவரும் தகவல்கள் இதில் பல்வேறு மர்மங்கள் உள்ளன என்று கட்டுகின்றன. இதனை  உறுதி செய்வதாக வியட்நாம் போக்குவரத்து துணை அமைச்சர் தகவல் உள்ளது.

“விமானம் மாயமாக மறைத்த அன்றே, அந்த விமானம் மேற்கு நோக்கி திரும்பி சென்ற விஷயம் எமக்கு தெரியும்!”

வியட்நாம் போக்குவரத்து துணை அமைச்சர் பம் குய் யு, இன்று நடத்திய செய்தியாளர் மாநாட்டில், மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தை தேடும் பணியின் சில பகுதிகளை தற்காலிகமாக நிறுத்தியுள்ளதாக தெரிவித்தார்.

“இந்த விமானம், வந்த பாதையில் இருந்து திரும்பி, மேற்கு திசையில் சென்றதாகவும், மலாக்கா கடல் அருகே ராடாரில் தென்பட்டதாகவும் இப்போது சொல்கிறார்கள். அப்படியானால், அது மீண்டும் மலேசியாவை கடந்து, மேற்கே சென்றிருக்கிறது. அப்படியிருக்கும்போது, நாம் எதற்காக வியட்நாமில் அந்த விமானத்தை தேட வேண்டும்?” என கேட்டார் அமைச்சர்.

(இதற்கிடையே மலேசிய விமானப்படை அதிகாரி ஒருவர், விமானம் மேற்கு நோக்கி திரும்பியதாக நாம் சொல்லவில்லை என யு-டர்ன் அடித்துள்ளார்! லேட் டினையல்!)

செய்தியாளர் ஒருவர், “மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம், திரும்பிச் சென்றது என்பதை மலேசியா உங்களிடம் உறுதி செய்ததா?” என்று கேட்டார்.

அதற்கு பதிலளித்த அவர், “மலேசியா என்ன சொல்வது? விமானம் மாயமாக மறைத்த அன்றே, அந்த விமானம் மேற்கு நோக்கி திரும்பி சென்ற விஷயம் எமக்கு தெரியும்! அதை நாம் மலேசியாவுக்கு தெரிவித்தோம். அதற்கு அவர்களிடம் இருந்து எந்த பதிலும் இல்லை. அது ஏன் என்று தெரியவில்லை” என்றார்.

மலேசிய அரசிற்கு முன்னரே தெரிந்து இருந்தால் அதனை ஏன் மறைக்கிறது என்பது பல்வேறு சந்தேகங்களை உண்டாக்குகிறது.

மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு
மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு