மீண்டும் உலகக் கோப்பையை வெல்வோம் தோனி நம்பிக்கை!

msd
தொடர்ந்து 2 உலகக் கோப்பயை வென்று ஆஸ்ட்ரேலியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகளே சாதித்துள்ளது. அந்த வரிசையில் இந்தியாவும் இணையும் என்று இந்திய கேப்டன் தோனி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

11-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு (2015) பிப்ரவரி 14-ந்தேதி முதல் மார்ச் 29-ந்தேதி வரை ஆஸ்திரேலியா, நியூசிலாந்து நாடுகளில் நடைபெறுகிறது. உலக கோப்பை திருவிழாவுக்கு தொடங்க சரியாக ஓராண்டு இருப்பதை யொட்டி இந்திய கேப்டன் தோனி, ஐ.சி.சி. இணையதளத்துக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

உலக கோப்பையை தக்க வைத்துக் கொள்வதற்கான போட்டியில் களம் இறங்க இன்னும் ஓராண்டு மட்டுமே இருக்கிறது என்பதை நினைக்கும் போது சிலிர்ப்பாக உள்ளது. மும்பையில் அந்த அதிசயத்தக்க இரவு வந்து (உலக கோப்பையை வென்ற நாள்) ஏறக்குறைய மூன்று ஆண்டுகள் ஓடோடி விட்டது.

அந்த இரவு மட்டுமின்றி, அந்த ஒட்டுமொத்த தொடரும் என்றுமே எங்களது வாழ்க்கையில் மறக்க முடியாதது. உலக கோப்பை வரலாற்றில், வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் மட்டுமே உலக கோப்பையை அடுத்தடுத்து ருசித்த அணிகள் என்பதை நாங்கள் அறிவோம். அந்த சாதனைப்பட்டியலில் 3-வது அணியாக எங்களால் இடம் பிடிக்க முடியும். அதற்குரிய தகுதி எங்களிடம் இருப்பதாக நம்புகிறேன்.

மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு
மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு