ராஜீவ் கொலை வழக்கில் மூன்று பேரின் தண்டனை ரத்தாகுமா?

Rajiv Gandhi assassination case: Supreme Court verdict on convicts' plea today

புதுடெல்லி, பிப்ரவரி 18 – முன்னாள் பிரதமர் ராஜீவ் கொலை தொடர்பான வழக்கில் முருகன்,   சாந்தன், பேரறிவாளன் உட்பட மூவரின் தூக்குத்தண்டனை ரத்தாகுமா என்பது இன்று தெரியும். சுப்ரீம்கோர்ட்டு தனது தீர்ப்பை இன்று வழங்குகிறது.

தலைமை நீதிபதி சதாசிவம் தலைமையிலான சுப்ரீம்கோர்ட்டு அமர்வு இன்று இதுபற்றி தீர்ப்பு அளிக்கிறது. காலதாமதாமாக கருணை மனு நிராகரிக்கப்பட்டதால் தூக்குத்தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. தண்டிக்கப்பட்ட பேரறிவாளன்,சாந்தன், முருகன் ஆகிய மூவரும் மனுத்தாக்கல் செய்திருந்தார்கள். இந்த மனு மீதான விசாரணை முடிந்து இன்று தீர்ப்பு வழங்கப்படுகிறது. கருணை மனுக்கள் தாமதமாக நி்ராகரிக்கப்பட்ட 13 பேரின் மரண தண்டனையை உச்சநீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டது நினைவிருக்கலாம். ஜனவரி 21-ல் அளிக்கப்பட்ட அந்த தீர்ப்பின் அடிப்படையில் மேற்கண்ட மூவரின் தூக்கும் ரத்து செய்யப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு
மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு