விஜய்காந்தை மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் – பண்ருட்டியின் பலே பல்டி

panruti-ramachandran

விஜயகாந்தை மக்கள் கண்டிப்பாக ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்” என்று பண்ருட்டி ராமச்சந்திரன் கூறியுள்ளார்.

பண்ருட்டி அருகே அவரது சொந்த கிராமத்தில் செய்தியாளர்களை சந்தித்த பண்ருட்டி ராமச்சந்திரன் கூறியதாவது, “சில அடிப்படை கொள்கைகளுடன் அரசியல் கட்சி நடத்தப்பட வேண்டும். அப்போது தான் கட்சியில் குழப்பங்கள் வராது. ஆனால், விஜயகாந்த் சொந்த விருப்பம், வெறுப்பு வைத்து அரசியல் நடத்துவதால் தொண்டர்கள் குழப்பம் அடைந்துள்ளனர். இதனால் எந்த கூட்டணியிலும் சேர முடியாத ஒரு குழப்பமான நிலையிலேயே தேமுதிக இருந்து வருகிறது.

ஆலந்தூர் தொகுதியில் மீண்டும் போட்டியிடப்போவதில்லை. எனது மகன் சம்பத் தற்போது அரசியலுக்கு வரவில்லை. வரும் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவை ஆதரித்து பேச இருக்கிறேன். தமிழகத்தின் எதிர்காலம் அதிமுக கூட்டணி வெற்றி பெற்றால் மட்டுமே சிறப்பாக அமையும்.

விஜயகாந்த் தொண்டர்களின் ஆதரவை இழந்து வருவது தெரிகிறது. எம்.எல்.ஏ., தொண்டர்களை அடிப்பது, நாகரீகமற்ற முறையில் மேடையில் பேசுவது போன்ற செயல்களில் விஜய்காந்த் ஈடுபட்டு வருகிறார்.

விஜயகாந்தின் நிலைபாடு சரியில்லாத காரணத்தினால் தான் நான் அக்கட்சியில் இருந்து வெளியேறினேன். என்னுடன் பலர் வெளியேறினார்கள். தேமுதிகவின் எதிர்காலம் வரும் காலத்தில் கேள்விகுறியாகத் தான் இருக்கும்” என்று தெரிவித்தார்.

மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு
மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு