வெளியானது அதிமுக தேர்தல் அறிக்கை! 10 கோடி பேருக்கு வேலை என வாக்குறுதி!

Top 10 Innovative Welfare Schemes Of Dr.J.Jayalalitha

சென்னை, பிப்ரவரி 26:நாடாளுமன்ற தேர்தலையொட்டி அ.தி.மு.க தேர்தல் அறி்க்கையை முதல்வர் ஜெயலலிதா இன்று வெளியிட்டார். இதில் மொத்தம் 43 அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலுக்கான அதிமுகவின் தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் பொதுச்செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா இன்று கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று வெளியிட்டார். தேர்தல் அறிக்கையின் தமிழ் மற்றும் ஆங்கிலப் பிரதிகளை அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், விசாலாட்சி பெற்றுக் கொண்டனர்.

தமிழ்நாட்டின் முன்னேற்றம் மற்றும் வளர்ச்சிக்காவும் மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த இந்தியாவுக்குமான முன்னேற்றம் மற்றும் வளர்ச்சிக்கான திட்டங்களை தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளதாக, தேர்தல் அறிக்கையை வெளியிட்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜெயலலிதா தெரிவித்தார்.

தேர்தல் அறிக்கையில் 43 அம்சங்கள் அமைதி, பலம், வளர்ச்சி ஆகிய இலக்குகளை வைத்து இந்தியா மேன்மை பெற செயல்திட்டத்தோடு தயாரிக்கப்பட்டுள்ள இந்த தேர்தல் அறிக்கையில், மொத்தம் 43 அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

கூட்டுறவு கூட்டாட்சி, இலங்கைத் தமிழர் பிரச்னை, தமிழக மீனவர்கள் நலன், கச்சத்தீவு மீட்பு, சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீடு, தமிழ் ஆட்சி மொழி, காவிரி மேலாண்மை வாரியம் ஆகிய தமிழ்நாட்டு பிரச்னை தொடர்பாக தேர்தல் வாக்குறுதிகள் அறி்விக்கப்பட்டுள்ளன.

தேசிய அளவிலான வாக்குறுதிகளாக மதச்சார்பின்மை, சமூக நீதி, மகளிர் இடஒதுக்கீடு, நதிகள் இணைப்பு மற்றும் தேசியமயமாக்குதல், கருப்பு பணத்தை மீட்டெடுத்தல், பிறநாடுகளுடான இரட்டை வரி தவிர்ப்பு ஒப்பந்தம் குறித்து ஆய்வு, நிலக்கரி சுரண்டல், தனிநபர் வருமான வரி, உழவர் பாதுகாப்பு திட்டம், ரகுராம்ராஜன் குழுவின் பரிந்துரைக்கு எதிர்ப்பு, ஊழல் ஒழிப்பு போன்ற அம்சங்கள் தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ளன.
தனி ஈழத்திற்கு வாக்கெடுப்பு

  • இலங்கை உள்நாட்டின் போரின்போது, போர் குற்றங்கள் நிகழ்த்தியவர்களை, இனப்படுகொலை செய்தவர்களை சர்வதேச நீதிமன்றம் முன் நிறுத்தி தண்டனை பெற்றுத்தரவும், இலங்கை வாழ் தமிழர்களுக்கு நியாயம் கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்குமாறு ஐ.நா.சபையை வலியுறுத்தவும், தனி ஈழம் அமைந்திட இலங்கை வாழ் தமிழர்கள் மற்றும் உலகின் பல்வேறு பகுதிகளிலும் வாழும் இடம் பெயர்ந்த இலங்கை தமிழர்களிடையே பொது வாக்கெடுப்பு நடத்தவும் அ.தி.மு.க. உறுதி பூண்டுள்ளது.
  • கச்சத்தீவை மீட்டெடுப்பதுதான் தமிழக மீனவர்கள் பிரச்னைக்கு நிரந்தர தீர்வாக அமையும்.
  • 10 கோடி வேலை வாய்ப்புகள்
  • 5 ஆண்டுகளில் 10 கோடி பேருக்கு வேலை வாய்ப்புகள் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்
  • உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்க நடவடிக்கை.
  • வருமான வரி விலக்கு வரம்பை ரூ. 5 லட்சமாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும்.
  • தொலைநோக்கு திட்டம் 2023 திட்டத்தை இந்தியா முழுமைக்கும் தீட்டி, இந்தியாவின் ஒட்டுமொத்த வளர்ச்சியை அதிகரிக்க நடவடிக்கையை அ.தி.மு.க. எடுக்கும்.
  • வெளிநாடுகளில் உள்ள வங்கிகளில் முடங்கி கிடக்கும் பல லட்சம் கோடி ரூபாய் கருப்பு பணத்தை மீட்டு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும்.
  • நாடாளுமன்றத்திலும், சட்டமன்றத்திலும் 33 விழுக்காடு இடங்களை பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யும் மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்ற தேவையான நடவடிக்கைகளை எடுப்போம்.
  • இட ஒதுக்கீட்டு கொள்கையை தொடர்ந்து நிலைநாட்ட அ.தி.மு.க. பாடுபடும். இதேபோன்று அந்தந்த மாநிலங்களில் நிலைமைகளுக்கு ஏற்ப இட ஒதுக்கீடு பின்பற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.
RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு
RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு