வைகோவிற்கு எதிராக ராஜபக்சே – ஸ்டாலின் சதி? வைகோ பரபரப்பு புகார்.

vaigo

மார்ச் 19, ம.தி.மு.க. உயர்நிலைக்குழு– மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னையில் நடந்தது. இதில் வைகோ பேசியதாவது:–

பாராளுமன்ற தேர்தலில் பாரதீய ஜனதா கூட்டணி அமோக வெற்றிபெறும். பா.ஜனதா தனியாகவே 272 தொகுதிகளை கைப்பற்றும். மத்திய மந்திரி சபையில் ம.தி.மு.க. இடம்பெறும் என்ற உறுதிமொழியை உங்களுக்கு தருகிறேன்.

பா.ஜனதா கூட்டணியில் ம.தி.மு.க.வுக்கு 10 தொகுதிகள் கேட்டோம். பின்னர் 9 தொகுதிகள், 8 தொகுதிகள் என்று குறைக்கப்பட்டது. அதன்பிறகு மோடி கூறியாக ராம்ஜெத்மலானி என்னை தொடர்பு கொண்டு பேசினார். அப்போது ஒரு தொகுதியை குறைத்துக்கொள்ள வேண்டும் என்றார். அதை ஏற்றுக்கொண்டேன். தற்போது 7 தொகுதிகள் தருவதாக உறுதி அளித்துள்ளனர்.

விருதுநகர், ஈரோடு, காஞ்சீபுரம், தேனி, ஸ்ரீபெரும்புதூர், தூத்துக்குடி ஆகிய தொகுதிகள் இறுதி செய்யப்பட்டு விட்டன. தென்காசி தொகுதியை பெறுவதில் மட்டும் சிக்கல் இருக்கிறது.

விருதுநகர் தொகுதியில் என்னை தோற்கடிக்க வேண்டும் என்று பல்வேறு தொண்டு நிறுவனங்கள் மூலம் இலங்கை அதிபர் ராஜபக்சே சதி செய்கிறார்.

மு.க.ஸ்டாலினும் என்னை தோற்கடிக்க திட்டம் வகுத்துள்ளதாக செயல் வீரர்கள் கூட்டத்தில் கே.கே.எஸ்.எஸ்.ஆர். பேசியுள்ளார். இந்த சதிகளை தகர்ப்போம்.

மதுரை விமான நிலையத்தில் மு.க.அழகிரியை சந்தித்தேன். அது மிகவும் நெகிழ்ச்சியான சந்திப்பு.

தேர்தலுக்கு செலவு செய்ய போதுமான பலம் ம.தி.மு.க. வேட்பாளர்களிடம் இல்லை. என்றாலும் மக்கள் பலம் இருக்கிறது.

இவ்வாறு வைகோ பேசினார்.

By True Tamil

மார்ச் 19, 2014
மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு
மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு